பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

159

முடியவில்லை. மூன்றாம் சுற்றிலோ அவள் பின்தங்கிவிடவே நேர்ந்தது. அவள் பந்தை எடுத்துக் கொண்டு எட்டிப்பிடிக்கத் தொடங்குமுன், மிலானியின் இலக்கை எட்டிப் பிடித்துப் பந்தயத்தில் வெற்றிப் பெற்றான்.

மன்னனும் மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கும் காட்டிய ஆர்வத்துக்கும் கிளர்ச்சிக்கும் எல்லை இல்லை. அட்லாண்டா கூடப் பந்தய வெறி தீர்ந்ததே தான் தோற்றது பற்றி மகிழ்ந்து, "பந்தயத்தில் தோற்றேன்; வாழ்க்கையில் வெற்றி பெற்றேன்” என்று ஆர்வத்துடன் கூறினாள்.

அட்லாண்டாவின் போட்டியற்ற வீரம் மிலானியனின் காதலில் முற்றிலும் தன் வயமிழந்து நின்று நிறைவெய்திற்று.