சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
163
தொட்டியைக் கண்டான். இருவரும் குளிராலும், ஈரத்தாலும், பசியாலும் குற்றுயிராயிருந்தனர். அவன் அவர்களை வீட்டுக்கு இட்டுச் சென்று, உலர்ந்த ஆடைகள் கொடுத்து உணவூட்டினான். கடலில் மிதந்த அயர்வுதீரப் பலநாட்கள் ஆயின.
அவர்கள் துயரக்கதையை ஒருவாறு கேட்டறிந்த டிக்டிஸ் அவர்களுக்கு ஆறுதல் கூறி, இருவரையும் தன் மகள், மகள் பிள்ளையாகவே வளர்த்து வந்தான்.
பாலிடெக்டிஸ் அடிக்கடி தன் தம்பி இல்லத்துக்கு வருவதுண்டு. அச்சமயங்களில் அவன் தானேயைக் கண்டான். அவள் அழகு அவனை மயக்கிற்று. அவன் அவளை மனம் செய்துகொள்ள விரும்பினான். அடிக்கடி அவளிடம் தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினான். ஆனால், பெருந் தெய்வமாகிய ஜீயஸூக்கே தானே தன்னை உரியவளாகக் கருதிவிட்டாள். எந்த மனிதரையும் அவள் மணக்க விரும்ப வில்லை. ஆதலால், பாலிடெக்டிஸ் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் இணங்கவில்லை.
தானேயை வயப்படுத்தும் எண்ணத்துடன் பாலிடெக்டிஸ் பெர்ஸியஸிடம் வெளிநட்புக் காட்டி வந்தான்.ஆனால், வீரமும் கட்டழகும் வாய்ந்த அந்த இளைஞனை அவன் உள்ளூர வெறுத்தான். தாய் திருமணம் செய்யாமலிருப் பதற்கு, இத்தகைய மகன் இருப்பதே காரணம் என்று அவன் நினைத்ததனால், பெர்ஸியஸ்மீது அவன் வெறுப்பு இன்னும் மிகுதியாயிற்று. எப்படியாவது பெர்ஸியஸை ஒழித்துவிட வேண்டும் என்று பாலிடெக்டிஸ் திட்டமிட்டான்.
ஒருநாள் பாலிடெக்டிஸ் பெர்ஸியஸை ஒரு விருந்துக்கு அழைத்தான். நட்புப் பேச்சுக்கிடையே அவன் பெர்ஸியஸிடம், “நான் கேட்ட எதுவும் நீ கொடுப்பாயா?" என்று வினவினான். அதை விளையாட்டாக எண்ணி, பெர்ஸியஸ் "ஓகோ, கட்டாயம்' என்றான்.
""
இதுதான் வாய்ப்பு என்று கருதிய பாலிடெக்டிஸ், “எனக்கு நீ வல்லரக்கி மெடூசாவின் தலையைக் கொண்டு வந்து கொடுக்க முடியுமா?" என்றான்.