பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(164) ||__.

அப்பாத்துரையம் 36

பெர்ஸியஸ் திடுக்கிட்டான். மெடூசாவைப்பற்றி அவன் கோரமான செய்திகளைக் கேட்டிருந்தான். அவள் இருந்த இடத்துக்கே யாரும் சென்றதில்லை. யாருக்கும் அதன் திசைகூடத் தெரியாது. அவள் அழகிய பெண் முகத்துடன், பாம்புகளையே தலைமுடியாகக் கொண்டு, கழுகுகளின் இறக்கை போன்ற பெரிய இறக்கைகளை உடையவள். மேலும் அவள் முகத்தைப் பார்த்தவர்கள் உடனே கல்லாய் விடுவார்கள். இத்தகைய வல்லரக்கியின் தலையை வெட்டிக் கொண்டுவரச் சொல்வதென்றால், சாகும்படி சொல்வதாகத் தான் பொருள். 'இங்ஙனம் சொல்பவன் நம் மாறாப் பகைவனே' என்று பெர்ஸியஸ் தனக்குள் கூறிக் கொண்டான்.

உயிர்கொடுத்தும்

கொடுத்த வாக்குறுதியை காக்கவேண்டும் என்ற எண்ணத்தால் பெர்ஸியஸ் கவலையுடன் அலைந்து திரிந்தான். ஒருநாள் கடற்கரையோரமாக அவன் உலவும்போது ஒரு பேரொளி உருவம் அவன் முன் தோன்றிற்று. அதுதான் அதேனாதேவி.

"பெர்ஸியஸ்! தேவர்களுக்கு உன்மீது பாசம் மிகுதி. உனக்கு என் மூலம் அவர்கள் எல்லாவகை உதவியும் செய்ய முன் வந்திருக்கினறனர். இதோ பார், அவர்கள் உனக்கு அனுப்பியுள்ள பரிசுகளை! இது வெண்கலத் தலையணி; இதை அணிந்தால் நீ எவர் கண்ணுக்கும் புலப்படாமல் எங்கும் திரியலாம். இதோ இறக்கைகள் பூட்டிய மிதியடிகள். இவற்றில் ஏறிக்கொண்டு நீ நிலம், காடு, கடல், எதுவும் கடந்து செல்லலாம். இந்தக் கேடயம் உன்னை இடர்கள் எல்லாவற்றிலிருந்தும் காக்கும். இந்தக் கொடுவாள் உன் பகைகள் எதுவாயினும் ஒழிக்கும்” என்று தேவி கூறினாள்.

பெர்ஸியஸ் துயர்நீங்கி அகமகிழ்வுடனும், நன்றியறி தலுடனும் மீண்டும் மீண்டும் தேவியை வணங்கினான். போகும்வழி, நடந்து கொள்ளும் முறைமை, இடர்களிலிருந்து தப்புவதற்கான எச்சரிக்கைகள் ஆ கிய அறிவுரைகள்

பலவற்றையும் அதேனா பெர்ஸியஸுக்கு அறிவித்தாள்.

பெர்ஸியஸ் தன் தாயிடம் சென்று நடந்தவை யாவும் கூறி விடை கோரினான். 'தாய் மகனைப்பற்றிக் கவலைப்பட்டாள்.