166
அப்பாத்துரையம் - 36
"மெடூசாவைக் காணும் வழியைக் கூறுங்கள், உங்கள் கண்ணை அப்போதுதான் தருவேன்" என்றான் பெர்ஸியஸ்.
அவர்கள் மேலும் அழுதனர். ஏனென்றால், மெடூசாவிடம் அவர்களுக்குப் பாசம் மிகுதி. ஆனாலும் கண்ணைப் பெற வேறு வழியில்லாமல். அவர்கள் மெடூசா பற்றியாவும் கூறினர்.
கிழக் கன்னியரிடமிருந்து வழியறிந்தபின், பெர்ஸியஸ் மீண்டும் தெற்காகத் திரும்பிப் பறந்தான். உலகின் தென்கோடி கடந்தபின் பகலாட்சி தாண்டி இரவாட்சியின் பரப்பில் சென்றான். உலகிற்கப்பாலுள்ள எல்லையற்ற புறக்கடல் எங்கும் கருங் கும்மென்று இருளில் இருளாகத் தோற்றிற்று.
இருண்ட கடலின் நடுவே ஓர் அகலமான தீவு இருந்தது. அதில் மூன்று பெண்கள் இருந்தனர். இருவர் உறங்கினர். ஒருத்தி மட்டும் சுற்றிச் சுற்றி நடந்தும் பறந்தும் அவர்களைக் காத்தாள். அவள் தலையின் ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு பாம்பாகச் சீறிற்று. அவள் முகம் அழகாகயிருந்தாலும், அருவருப்பாயிருந்தது. பெரிய இறக்கைகள் ஆடைகள்போல மூடியிருந்தன. அவளே வல்லரக்கி மெடூசா என்று பெர்ஸியஸ் அறிந்து கொண்டான்.
உடல்
எவரும் வரமுடியாத தன் தீவில் எவரோ வந்திருப்பதை மெடூசாவும் உணர்ந்து கொண்டாள் என்பதை அவள் சுற்றிச்சுற்றி பார்த்த பார்வை தெரிவித்தது.
பெர்ஸியஸ் இப்போது இருந்தது நாலு திகைளிலுமில்லை. உச்சிக்கு நேர்மேலே அவன் பறந்து கொண்டிருந்தான். இதனால் அவன் மெடூசாவின் பார்வையில் படவில்லை. முகத்தையும்
ன்னும் மேலே காணவில்லை. அத்துடன் அம்முகத்தைக் கண்டவர் கல்லாய்ப் போய் விடுவார்கள் என்பதை அவன் மறக்கவில்லை. அவள், தன்னைக் காணாமல் அவன் தன் தலையணியால் தன்னைக் கண் புலப்படாமல் மறைத்துக் கொண்டான். ஒரு கையில் வாளுடனும் மற்றக் கையில் கேடயத்துடனும் அவன் மெடூசாவை அணுகினான். மெடூசாவைப் பாராமலே அவள் தலையை அறிந்து வெட்டும்படி, அவன் தன் கேடயத்திலுள்ள அவள் நிழல் வடிவத்தைப் பார்த்துக் கொண்டே சென்றான்.