சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5
167
மெடூசாவின் தலையைப் பெர்ஸியஸின் தெய்வீக வாள் முதல் வெட்டிலேயே துண்டுபடுத்திவிட்டது. அச்சமயம் அவள் வீறிட்டுக் கூக் குரலிட்டாள். தூங்கியிருந்த அவள் தோழியர் இருவரும் எழுந்து பறந்து கொலைகாரனைக் கொல்ல விரைந்து வட்டமிட்டனர். ஆனால், அதற்குள் பெர்ஸியஸ் மெடூசாவின் தலையைப் பார்க்காமலே அதை ஒரு பையிலிட்டு, அதனுடன் வானில் எழுந்து பறந்தான். அவன் தலையணி அணிந்திருந்ததால், மெடூசாவின் தோழியர் அவனைக் காணாமல் அலறிக் காண்டே இருந்தனர். நெடுந்தொலை செல்லும் வரை பனிக்காற்றுடன் பனிக்காற்றா அவர்கள் அலறல்
பெர்ஸியஸுக்குக் கேட்டது.
காற்றுவெளியில் பறந்து வந்துகொண்டிருக்கும்போது, பெர்ஸியஸ் காதுகளில் ஒரு பெண்ணின் அழுகைக் குரல் கேட்டது. குரல் பாறைகளிலிருந்து மிதந்து வந்ததாகத் தோன்றிற்று. அவன் பாறைகளைச் சுற்றிப் பறந்து பார்த்தான். எவரும் அணுக முடியாத ஒரு கொடும்பாறையில் அழகே உருவெடுத்தாற்போன்ற ஒரு பெண்மணி சங்கிலியினால் அசைய முடியாதபடி கட்டப் பட்டிருந்தாள். அவள் அங்கங்கள் ஒவ்வொன்றும் தாங்க முடியாதபடி வேதனையால் துடித்தன. கதறியழுது அவள் தொண்டையடைத்து முகம் வீங்கியிருந்தது.
பெர்ஸியஸ் மனம் பாகாய் உருகிற்று. அவன் உடனே தன் வாளின் மொட்டைப் பக்கத்தால் சங்கிலிகளை உடைத்தெறிந்து அவளை விடுவித்தான். நீண்டு வேதனைால் அவள் சோர்ந்து உணர்விழந்தாள். பெர்ஸியஸ் அருகில் உள்ள பாறைகளில் பறந்து சென்று தேடி, நீர் கொணர்ந்து தெளித்து, உணர்வு வருவித்தான். அதன்பின், அவன் அப் பெண்மணியிடம் கனிவுடன் பேசினான். “நீ யார் அம்மா? இங்கே எப்படி வந்தாய்? இந்த இடரை உனக்கு யார், எதற்காகச் செய்தார்கள்?” என்று கேட்டான்.
பெண்மணியின் உடலில் இப்போதும் நடுக்கம் தீரவில்லை. அவள் கைகால்கள் புயலில்பட்ட தளிர்கள் போலத் துடிதுடித்தன. அவள் தன் துயரக்கதையைச் சுருக்கமாகக் கூறினாள்.