(170 ||
அப்பாத்துரையம் 36
—
ஆர்கஸ் செல்லும் வழியில் ஒரு புயல் வந்து பெர்ஸியஸின் கப்பலைத் தெஸ்ஸலி நாட்டுக்கரையில் ஒதுக்கிற்று. தெஸ்ஸலி அரசன் அவர்களை வரவேற்றான்.
தெஸ்ஸலி நாட்டின் தலைநகரான லாரிஸாவில் அப்போது ஒரு வீரக் கேளிக்கைப் போட்டி நடந்தது. அரசன் பெர்ஸியஸை அதில் கலந்து கொள்ளும்படி வேண்டினான். ஆர்கஸின் கிழ அரசன் அக்ரிசீனும் அதில் ஈடுபட்டிருந்தான். பெர்ஸியஸ் போட்டியில் எறிந்த சக்கரப்படை தவறி அவன் மீது விழ, அவன் உயிர்நீத்தான். இங்ஙனம் பெர்ஸியஸ் தான் அறியாமலே அவன் தன் பாட்டனைக் கொன்றுவிட நேர்ந்தது.
ஆர்கஸின் மக்கள் பெர்ஸியஸையே அரசனாகத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், ஊழமைதியை முற்றிலும் நிறைவேற்றிவிடப் பெர்ஸியஸ் மறுத்தான்.மெகபரந்திஸ் என்ற டிரின்ஸ்நகர் அரசனையே அவன் ஆர்கஸ் அரசனாக்கினான். பெர்ஸியஸ் தன் மனைவி ஆண்ட்ரோ மீடாவுடனும், தன் தாய் தானேயுடனும் டிரின்ஸ் நகரில் புகழுடன் ஆண்டுவந்தான்.