பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. பறக்கும் குதிரை

(குதிரையை அடக்கும் வீரச்செயல் பற்றிய செய்தி பல நாட்டுக் கதைகளிலும் வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. பறக்கும் குதிரையைப் பற்றிய செய்திகளும் மிகப் பழங்காலக் கதைகளில் காணப்படுகின்றன. தமிழகத்தில் சாத்தன் என்ற பண்டைப் பழந்தெய்வத்தின் ஊர்தியாகப் பறக்கும் குதிரை இடம் பெற்றுள்ளது. தமிழகத்தின் சிற்றூர்களில் ஒன்றில் இன்னும் ஆண்டுக்கு ஒருநாள் பறக்கும் குதிரை விழா நம்பிரான் விழா என்ற பெயருடன் பழைய சாத்தன் அடியவர்களின் பரம்பரையினரால் நடத்தப்பட்டு வருகிறது. கிரேக்கரின் பறக்கும் குதிரையாகிய "பெகாஸஸ்" பற்றிய கதையை இவ்ஒப்புமை களுடன் இங்கே தருகிறோம்)

கொரிந்த் நகரில் ஒரு பறக்கும் குதிரை இருந்தது. அதை யாராலும் பிடிக்கவோ அதன்மேல் ஏறவோ முடியவில்லை. பிடிப்பவர் அணுகுமுன் அது அவர்களை உதைத்துத் தள்ளி வானில் பறந்து வட்டமிட்டு, வீறுடன் மீண்டும் இறங்கி வந்து, “எவரும் ஏறாக் குதிரையாக” இறுமாந்து நின்றது. அதன் பெயர் பெகாஸஸ். அது தூய வெள்ளை நிறமுடையதாய், மண்ணுலகக் குதிரைகளைவிட உயரமும் பருமனும் உடையதாயிருந்தது.

மக்கள் அக்குதிரையைத் தெய்வீகப் பிறவி என்றே கருதினர். மெடூசாவின் தலையைப் பெர்ஸியஸ் வெட்டிய பொழுது, அதினின்று தெறித்த குருதி, ஒருகுதிரை உருவில் படிந்தது. தேவர்கள் அதை ஒரு தெய்வீகக் குதிரை ஆக்கினர். இக்குதிரையையே பெகாஸஸ் என்று கொர்ந்த் மக்கள் கூறினார்.

பெகாஸஸைப் பிடிக்கப் பலதடவை முயன்று தோல்வி யுண்டவர்களுள் கொரிந்த் அரசன் மகனான பெல்லராஃவான் ஒருவன். ஆனால், மற்றவர்களைப் போல அவன் தோல்விகளால்