பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. ஆண்டியின் புதையல்

அல்ஹாம்ரா நீருற்று: கிரானடா வெப்பம் மிகுந்த நாடு. குடி தண்ணீருக்குக்கூட அங்கே பஞ்சமாயிருந்தது.

கிரானடா

மன்னன்

அரண்மனையின்

பெயர் அல்ஹாம்ரா என்பது. அதன் அருகே தண்ணீருக்குப் பஞ்ச மில்லை. நிழலும் குளிர்ச்சியான காற்றும் போதுமான அளவு இருந்தன. ஏனென்றால் அங்கே ஒரு நறுநீர்க் கேணி இருந்தது. அதிலிருந்து நீரூற்றுப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அதன் குளிர் நீர் வனத்தால் சுற்றும்முற்றும் குளிர்மரக்காவும் தென்றலும் படர்ந்தன. மக்கள் தங்கியிருக்கப் படிக்கற்களும் மண்டபங்களும் இருந்தன. நகரின் செல்வர்களும் இளைஞர் களும் இங்கே அடிக்கடி வந்து தங்கிப் பொழுது போக்கினர். கேணியில் தண்ணீர் எடுக்கப் போகிறவர்கள். தண்ணீர் எடுத்து வருகிறவர்கள் அவ்வழியாக எப்போதும் திரள் திரளாகச் சாய்ந்து கொண்டிருந்தனர்.

கேணியருகேயுள்ள மக்களிடையே அடிக்கடி ஒரு குரல்.

பன்னீர் போலத் தண்ணீர்,

மன்னரும் விரும்பும் நன்னீர்,

அல்ஹாம்ராவின் அமுதம்,

தண்ணீர் வாங்கலையோ தண்ணீர்!

என்று களிப்புடன் பாடிச் செல்லும். அதுதான் தண்ணீர் விற்கும் பெரிகிலின் குரல்.

தாமே நேரில் சென்று அல்ஹாம்ராவின் அமுதத்தை எடுத்துக் கொண்டு வரமுடியாத உயர்குடிச் செல்வர்களுக்குப் பெரிகிலும், அவனைப் போன்று தண்ணீர் விற்கும் தண்ணீர் காரரும் அந்நீரைக் கொண்டு சென்று விற்றுப் பிழைத்தார்கள்.