பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(178) ||

அப்பாத்துரையம் - 36

பெரிகில் பார்வைக்கு அந்த சந்தமானவன் அல்லன். ஆனால், அவன் நல்ல உழைப்பாளி; சுறுசுறுப்பானவன்; எனவே அவன் உடல் உருண்டு திரண்டு உறுதியுடையதா யிருந்தது. அவன் சலியாமல் உழைத்ததனால், அவன் கையில் பணம் பெருகிற்று. தண்ணீர்க் குடங்களைச் சுமப்பதற்குப் பதில், ஒரு நல்ல கழுதையை வாங்கி அதன் மீது குடங்களை ஏற்றிச் சென்று, அவன் தன்தொழிலை இன்னும் வளர்த்தான்.

பெரிகிலின்

சுறுசுறுப்பையும்,

கலகலப்பையும்

ன்ப

பார்ப்பவர்கள் அவன் கவலையற்றவன் என்று நினைப்பார்கள். ஆனால், அவன் எவ்வளவு உழைத்துப் பொருள் ஈட்டினாலும், அவன் குடும்ப நிலை மட்டும் உயரவில்லை. அவன் மனைவியின் தான்தோன்றித்தனமான நடையே இதற்குக் காரணம். அவள், அவன் பணத்தை ஊதாரித்தனமாகச் செலவிட்டு வாழ்க்கை வாழ்ந்து, பகட்டும் ஆரவாரமும் மேற்கொண்டாள். ‘பசியோபசி’ என்று வாடும் பிள்ளைகள் பலர் அவளுக்கிருந்தும், அவள் அவர்களை வீட்டில் கணவனிடம் விட்டுவிட்டு, ஊர் சுற்றி வம்பளந்தாள். கணவனை ஓயாது கடிந்தும் திட்டியும் தொல்லைக்கு ஆளாக்கினாள். பெரிகில் இத்தனையும் பொறுத்துக் கொண்டு, வீட்டு வேலைகளை எல்லாம் தானே செய்து, பிள்ளைகளையும் தன்னாலானவரை பேணி வளர்த்தான். வெளியிலேயுள்ள கடுமையான உழைப்பு, வீட்டுவேலை, குழந்தைகள் தொல்லை ஆகிய இத்தனைக் கிடையே கூட அவன்மன உறுதியும் கிளர்ச்சியும் குன்றாமல் எப்போதும் போலக் கலககலப்பாகத் தொழில் நடத்தனான்.

பெரிகில் இளகிய உள்ளம் உடையவன்.யாராவது அவன் உதவி கோரினால், அவன் தன் வேலையைக்கூடக் கவனியாமல் அவர்களுக்கு உதவி செய்வான். அவன் மனைவி இதற்காக அவனைக் குறைகூறிக் கண்டிப்பதுண்டு. "பிழைக்கும் மதியிருந்தால் உன் காரியத்தையாவது ஒழுங்காகப் பார். அடுத்தவர் காரியங்களை மேற்கொண்டு எனக்குத் தொல்லை வருவிக்காதே!” என்பாள். ஒருநாள் இவ்வகையில் அவனுக்குப் பெருத்த சோதனை ஏற்பட்டு விட்டது.

அன்று பகல் முழுவதும் வெப்பம் மிகுதியாயிருந்தது. தண்ணீர்க்காரர் எல்லோருக்குமே நல்ல வருவாய் கிடைத்தது.