பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

179

எனவே, எல்லாரும் கிடைத்த பணத்தைக் கொண்டு ஆர அமரப் பொழுது போக்கப் போய்விட்டனர். ஆனால், இரவில் முழுநிலா எறித்தது. மக்கள் அதன் அழகில் ஈடுபட்டு இரவிலும் பாழுது போக்க எண்ணி வெளியே நடமாடினர். வேறு தண்ணீர்க்காரர் இல்லாததால், பெரிகில் தனக்கு இன்னும் வேலையிருப்பது கண்டான். அன்று சற்று மிகுதிப்படி காசு ஈட்டித் தன் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று ஏதாவது வாங்கிக் கொடுக்க அவன் எண்ணினான். ஆனால் அங்ஙனம் செய்வதற்குள் ஒரு தடை ஏற்பட்டது.

பெரிகிலின் இரக்கச் செயல்: மூர் மரபைச் சேர்ந்த ஓர் ஆண்டி கேணியண்டை உட்கார்ந்திருந்தான். அவன் தோற்றம் இரக்கமூட்டுவதாயிருந்தது. பெரிகில் பையில் கையிட்டு ஒரு காசைப் பிடித்த வண்ணம் அவனை அருகே வரும்படி சைகை செய்தான். ஆண்டி அசையவில்லை. ஆனால், அவன் முகத்தில் ஏக்கம் தென்பட்டது. பெரிகில் அவனை அணுகினான். அவன் ஈனக்குரலில், “இரக்கமுள்ள ஐயனே! முதுமை, பிணி, அலுப்பு ஆகி மூன்றானாலும் பேசக்கூட முடியாதவனாகிவிட்டேன். எனக்குக் காசு வேண்டாம். நகரத்துக்கு உன் கழுதை மீது இட்டுக் கொண்டு போய்விடு. உனக்குப் புண்ணியம் உண்டு. தண்ணீர் விற்பதனால் உனக்கு வரக்கூடும் ஊதியத்தில் இரண்டத்தனை கொடுத்துவிடுகிறேன்” என்றான்.

பெரிகில் அவன்நிலை கண்டு உருகிவிட்டான். அவன் மிகுதி ஆதாயத்தை விரும்பவில்லை. விரைந்து அவனை நகரில் கொண்டு விட்டான்.வேண்டுமானால், பின்னும் உழைக்கவே எண்ணினான். “நான் உதவி செய்கிறேன்; ஆனால் பணம் வேண்டாம். துன்ப மடைந்தவருக்கு உதவி செய்யும்போது பணம் வாங்கப்படாது!” என்றான்.

ஆண்டி அசைய முடியவில்லை. அவனைக் கிட்டத்தட்டத் தூக்கியே கழுதைமீது ஏற்ற வேண்டியிருந்தது. கழுதை நடக்கத் தொடங்கிய பின்னும் தன்பிடி சாயவிட்டால் அவன் விழுந்து விடுவான் என்று கண்டு பெரிகில் அவனைக் கையால் தாங்கிக் கொண்டே சென்றான்.

நகருக்குள் வந்தபோது பெரிகில் “அன்பனே! நகரில் எங்கே போக வேண்டும்?” என்று கேட்டான்.