பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

181 அவன் சோதனை பெருகிற்று. ஆண்டி ண்டியின் நோய் அவன் கழுதையில் ஏறிவந்த அதிர்ச்சியால் பன்மடங்காயிற்று. பெரிகில் செய்வதொன்றும் அறியாமல், கவலையே வடிவாய் அருகில் இருந்தான்.

ஆண்டியின் கண்கள் அவனை நோக்கின. ஒரு முழு வாழ்நாளின் கனிவு அதில் இருந்தது. அவன் நெஞ்சிலிருந்து எறும்பின் குரல்போல மெல்லிய ஓசை எழுந்தது. “அன்பனே! உன் அன்புக்கு ஓர் எல்லையில்லை. என் வாழ்வின் இறதியில் வந்த தெய்வம் நீ! நீ எனக்காகக் கவலைப்படாதே. என் இறுதி அணுகிவிட்டது. உன் அன்புக்குக் கைம்மாறு தரமுடியாது. ஆயினும் இதோ இதை ஏற்றுக் கொள்” என்று கூறித் தன் இடுப்பிலிருந்து ஒரு சந்தனப் பெட்டியை எடுத்துக் கொடுத்தான். பெரிகில் அதை வாங்குமுன் ஆண்டியின் உயிர் உடலை விட்டுப் போய்விட்டது.

பெரிகிலுக்குச் சந்தனப்

துயரமும் கழிவிரக்கமும் பெட்டியைப்பற்றி நினைக்கவே நேரமில்லை. அதை அவன் மறந்துவிட்டான். “தங்க இடம் கொடுத்த இடத்தில், வந்தவன் பிணமானான். இனி, பிணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என் று கலங்கினான்.

“என் சொல்லை மீறி நடந்து கொண்டதன் விளைவு பார்த்தாயா? உன்னை நான் கட்டிக்கொண்டழுகிறேனே!" என்று மனைவி பிலாக்கணம் தொடங்கலானாள்.

“செய்தது செய்துவிட்டேன். நீ ஓசையுண்டு பண்ணினால் இன்னும் காரியம் கெட்டுவிடும். விடிய இன்னும் நேரம் இருக்கிறது. வெளிக்குத் தெரியாமல் பிணத்தை அப்பால் கொண்டுசென்று புதைத்துவிட வேண்டும். என்ன சொல்கிறாய்?” என்று தொடங் கினான் பெரிகில்.

பொது ஆபத்து மனைவியின் வழக்கமான ஒத்துழை யாமைக்குத் தடை விதித்தது. இருவரும் ஒத்துழைத்துப் பிணத்தை நகர்ப்புறத்துள்ள பாலைவன மணலில் புதைத்து விட்டனர்.

அவர்கள் செயலை வேறு யாரும் அறியவில்லை. ஆனால் அறியக் கூடாத ஒருவன் கண்களில் அவர்கள் திரும்பிவரும்