1. இளவரசி
மேலையுலகில் வடபுலத்தரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு, பெண்மையின் சாயலும் ஆண்மையின் வடிவழகும் பெருமிதமும் ஒருங்கே அமைந்த ஒரு மைந்தன் பிறந்தான். அரண்மனையின் செல்வமாகவும் நாட்டு மக்களின் உயிராகவும் அவன் பாராட்டப்பெற்று வளர்ந்து வந்தான்.
வடபுலத்தரசன் நண்பனான மன்னன் காமாவுக்கு ஒரு புதல்வி யிருந்தாள். அவள் பெயர் ஐடா. நண்பரான அரசரிரு வரும் இளமையிலேயே அவர்களுக்கு மண உறுதி செய்து வைத்திருந்தனர். இச் செய்தியைத் தந்தையரிருவரும் மறவாதது போலவே இளவரசனும் போற்றி வளர்த்தான். இளவரசி ஐடாவின் சிற்றுருவப் படம் அவன் மார்பகத்தில் எப்போதும் டம் பெற்றிருந்தது.
ஐடாவின் பல்கலைக் கழகம்
ஐடா குழந்தைப் பருவத்திலிருந்தே துடுக்கும் மிடுக்கும் மிக்கவளா யிருந்தாள். விளையாட்டுக் காலத்திலேயே ஆண்களின் ஆணவத்தைக் கண்டு வெறுப்புற்று, அவர்களை விலக்கிப் பெண்களை மட்டும் தோழியராகப் பொறுக்கி யெடுத்து அவர்களிடையேயும் ஆண்கள்மீது வெறுப்பைத் தூண்டிவந்தாள். இதனால், இளவரசன் ஐடாவின் பெயரையும் உருவையும் எவ்வளவு போற்றி வந்தானோ, அவ்வளவுக்கு ஐடா அவன் பெயரையும் பேச்சையும் நினைவையும் விழிப்புடன் தொலைவிலகற்றி வந்தாள்.
ா
காமா அரசன், தன் புதல்வியின் போக்குக்கண்டும் காணாமல் அது சிறு பிள்ளைத் துடுக்குத்தனம் என்று விட்டிருந் தான். அது முதிர்வது கண்டு அவன் கடிந்து கொண்டபோது, அவள், நயத்துடன் அவனை வசப்படுத்தியும், உறுதிகாட்டி