அப்பாத்துரையம் - 36
(184) ||. நோக்கினான்."இது ஒரு வழிபாட்டு மந்திரம். இதைப் படித்தால் புதையல்கள் எங்கிருந்தாலும் அதற்க வழி ஏற்படும். இடையே எத்தனை பெரிய பாறை இருந்தாலும் அதைத் தகர்த்து வழி உண்டாக்கும்” என்றான்.
பெரிகிலுக்கு இதைக் கேட்பதில் சிறிதும் உணர்ச்சி ஏற்படவில்லை. அவன் முகத்தைச் சுளித்துக் கொண்டே "இதைப் படிப்பதால் இஃதெல்லாம் வருமென்று நீ நம்புகிறாயா?" என்று கேட்டான்.
“ஆம். ஏன்?”
"இப்போது நீ படித்தாயே! உனக்கு என்ன நேர்ந்தது?”
66
"அதற்குள் நீ ஏன் இப்படிக் கலவரப்படுகிறாய்? இதோ, சிறு எழுத்துக்களில் பக்கத்திலும் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது. படித்து ஆய்ந்தோய்ந்து பார்க்க வேண்டும்" என்றான்.
"நீயே படித்துப் பார்த்துவை. நான் பிறகு வருகிறேன்" என்று பெரிகில் கூறித் தாளையும் அவனிடமே விட்டு வந்தான்.
அடுத்த நாள் பெரிகில் தாளைப்பற்றிய எதுவும் மறந்து வழக்கம்போல் வேலை செய்தான். அச்சமயம் பலர் பேசிய பேச்சுகள் அவன் காதில் விழுந்தன. பலரும் ஒரே பேச்சுப் பேசுவதாகத் தெரியவே. அவன் கவனித்து ஒட்டுக் கேட்டான்.
அல்ஹாமராவிலிருந்து ஏழு கல் தொலைவில் ஏழு கோபுரங்கள் இருந்தன. ஏழாவது கோபுரத்தின் உள்ளே எங்கோ புதையல் இருப்பதாக அறிந்த பல மூர் மரபு ஆண்டிகள் அங்கே சுற்றித் திரிந்து வந்ததாக மக்கள் பேசிக் கொண்டனர்.
பெரிகிலுக்கு உடனே சந்தனப் பெட்டியிலுள்ள தாள் நினைவுக்கு வந்தது. அதைக் கொடுத்தவன் ஒரு மூர் மரபினன் என்பதும், அதை மூர் மரபினன் ஒருவனே வாசிக்க முடிந்தது என்பதும் அவன் மூளையில் மின்னல் போல் ஒளி வீசின. “தன் வீட்டில் வந்து இறந்த ஆண்டி அப்புதையலைத் தேடி அலைந்த ஒரு மூராகத்தான் இருக்க வேண்டும். பாவம், அதை அடையுமுன் அவன் இறக்க நேர்ந்திருக்க வேண்டும். தன் கைம்மாறு கருதாத உதவிக்குக் கைம்மாறாகவே அவன் தன் உள்ளத்தின் உள்ளவாவுக்குரிய இரகசியத்தைத் தனக்குத்