பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

187

புதையல் - நள்ளிரவு. பாலைவனத்தில் அனல்மாரியும், மண்மாரியும் ஓய்ந்திருந்தன. ஆனால், பனிக்காற்று எல்லா வற்றையும் துளைத்துக் கொண்டிருந்தது. நீண்ட அங்கியும் தலைப்பாகைகளும் அணிந்து, போர்வைகளால் உடல் முழுதும் போர்த்துக்கொண்டு இரண்டு உருவங்கள் ஏழாவது கோபுரத்தை அடைந்து அதன் அடிவாரத்தில் குந்தியிருந்தன. தொலைவில் எங்கிருந்தோ நள்ளிரவுத் தொழுகைக் கூக்குரல் காற்றில் மிதந்து வந்தது. அதன் பின்பேயும் அஞ்சும் இரவின் பேரமைதி எங்கும் நிலவிற்று.

கடைக்காரன் நெஞ்சின் ஆழத்திலிருந்து அரபு மொழி மந்திரம் பனிக்காற்றினுடன் கலந்து பரந்தது. பெரிகில் மெழுகுவர்த்தியை ஏற்றினான். ஏற்றினவுடன் கோபுரத்தின் ஒரு பக்கமுள்ள பாறை வெடித்து ஒரு சுரங்கவழி தெரிந்தது. அவ்வோசைகேட்டு முதலில் இருவரும் கலங்கினர். பின் தேறி, பெரிகில் முன்செல்ல, கடைக்காரன் பின் சென்றான்.

கீழே படிக்கட்டுகள் வழியாக அவர்கள் உட்குகை ஒன்றை அடைந்தார்கள். வாயிலில் இரு பூதங்கள் உருவிய வாளுடன் நின்றன. கடைக்காரன், “அஞ்சாமல் செல்” என்றான். இருவரும் உட்சென்றனர். பூதங்கள் ஒன்றும் செய்யவில்லை. குகை மிக அகலமுடையதாக இருந்தது. அதன் நடுவே ஒரு பெரிய இரும்புப் பெட்டி இருந்தது. நான்கு மூலைகளிலும் நான்கு பூதங்கள் காவலிருந்தன. கடைக்காரன் முணுமுணுத்த மந்திரம் கேட்டு அவைகள் ஓங்கிய வாளைக் கீழே தொங்கவிட்டன. பெரிகில் கையில் ஏந்திய விளக்கொளி பட்டதும் அவை இருளுடன் இருளாக விலகின.

பெட்டியினுள் குடங்குடமாகத் தங்க வெள்ளி நாணயங்கள் மணிக்கற்கள் நிறைத்து வைக்கப்பட்டிருந்தன. இருவரும் கைகொள்ளு மட்டும் எடுத்து, மடிகொள்ளும் மட்டும் போர்வையில் சுற்றினர். அதற்குள் விளக்கொளி மங்கத் தொடங்கியது.கடைக்கதரன் ‘போதும், தம்பி; மூடி விடு; புறப்பட வேண்டும்' என்றான். அவர்கள் மூடிவிட்டுப் புறப்பட்டு வெளிவந்தனர். அவர்கள் வரும்போதே விளக்கணைந்து விட்டது.

படாரென்ற ஓசையுடன் கதவடைத்துக் கொண்டது. நல்லகாலமாக இருவரும் அதற்குள் வெளி வந்துவிட்டனர்.