சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
189
இக்கட்டுகளைக் கொண்டு வந்தாயே. இப்போது ஒன்றும் திருட்டு, கொள்ளைக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு..?"
மனைவி தன்னிடம் கொண்ட அவநம்பிக்கை பெரிகில் உள்ளத்தைச் சுட்டது. அவளிடம் இரகசியத்தைச் சொல்லவும் விரும்பவில்லை. ஆயினும் அவள் ஐயமகற்ற எண்ணி, “நீ ஏன் எப்போதும் இப்படித் தவறாகக் கருதுகிறாய்? அப்படி நான் என்றும் தவறான வழியில் சென்றவனும் அல்லன்; செல்கிறவனும் அல்லன்; இந்தப் பணம் ஒவ்வொரு காசும் நல்ல வழியில் வந்ததுதான்” என்றான்.
“உழைத்து வந்ததுதானா இத்தனையும்?"
அவன், ஆம்; என்று கூறமாட்டாமல் மௌனமாய் இருந்தான்.
66
முன்பே நீ ஆண்டிப்பயலை ப்பயலை நம்பி ஏமாந்தாய். இப்போதும்...
55
"முன்பும் ஏமாறவில்லை. அந்த ஆண்டி செய்த நன்மைதான் எல்லாம்!” என அவன் கூறவேண்டியதாயிற்று.
அவள் அத்துடன் விடவில்லை. "அப்படியா! அவன் என்ன செய்தான்.சொல்லு!" என்றாள்.
“அஃது ஓர் இரகசியம். அது யாருக்கும் தெரியக் கூடாது. தெரிந்தால் கெடுதல் வரும்" என்று அவன் எச்சரித்தான்.
கணவன் தனக்குத் தெரியாத இரகசியம் வைத்திருப்பதறிந்த அவள் பெண்மனம் அதை அறியத் துடிதுடித்தது."உன் மனைவி உனக்கு வேண்டாதவளா? எனக்கு மட்டும் தெரிவித்தால் என்ன? நான் உன் நேர் பாதியல்லவா?" என்று அவள் அவனைக் கரைத்தாள்.
எப்போதும் கடிந்து கொள்ளும் மனைவி, இப்போது கனிந்து கேட்டால் அவன் எப்படிக் கடுமையாயிருப்பான்? அவன் மெள்ள மெள்ளச் சந்தனப் பெட்டியினால் வந்த செல்வத்தின் வரலாறு யாவும் கூறிவிட்டான். அத்துடன் தான் முன் ஆண்டிக்குச் செய்த நற்செயலுக்கு அவள் தன் தன்னைத் தடுத்ததையும் பின் திட்டியதையும் சுட்டிக்காட்டி, "இனி நற்செயல் செய்வதைத் தடுக்காதே” என்றும் அறிவுரை கூறினான்.