பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

191

உண்டு. அவன் வாயிலில் வந்து நின்று பலகணி வழியாக என்ன நடக்கிறது என்று கவனிப்பான்.

ஒருநாள் பெரிகிலின் மனைவி வழக்கத்திற்குமேல் பட்டும் அணிமணிகளும் அணிந்து கண்ணாடிமுன் வந்து தன்னைப் பார்ப்பதும் பித்துக் கொள்ளிபோல் அறைக்குள் உலாவுவதுமாக இருந்தாள். இந்தக் கோலத்துடனேயே வெளியே ஏதோ அரவங்கேட்டு,பலகணி வழியாக எட்டிப் பார்த்தாள். அச்சமயம் அம்பட்டன் பெட்ரூகோ தன் கடையின் வாயிலில் எதிரேதான் நின்று கொண்டிருந்தான். அவள், அவனைக் கவனிக்கவில்லை. ஆனால், அவன் கவனித்தான். முற்றிலும் வியப்பும் மலைப்பும் கொண்டான். பெரிகிலின் செல்வம் உழைத்து ஈட்டியவன் செல்வமல்ல; ஒரு புதையல் செல்வமாயிருக்க வேண்டும் என்று

கண்டான்.

சூழ்ச்சியில் வல்ல பெட்ரூகோ மீண்டும் மன்னன் சீற்றத்தைக் கிளறி விட்டான். “அரசே! முன்பு அந்தப் பயல் பெரிகில் சொல்லை நம்பி என் சொல்லைத் தட்டிவிட்டீர்கள். அவன் காட்டிய சந்தனப் பெட்டியை நம்பி அவனை விடுதலை செய்தீர்கள். நான் கூறியது முற்றிலும் சரி என்று இப்போது அறிகிறேன். ஆண்டியிடமிருந்து பெற்றது சந்தனப்பெட்டி என்று ஏமாற்றியிருக்கிறான். உண்மையில் அவன் பெற்ற செல்வம் அஃது அன்று. உங்கள் அரண்மனைச் செல்வத்தைவிட மிகுதியான செல்வம் அவன் மனைவியின் அணிமணிகளிலேயே அடங்கிக் கிடக்கிறது. அவள் அவற்றுடன் வெளிவருவதில்லை - நான் பலகணி வழியாகக் கண்டேன்” என்றான்.

பெரிகில் பொய் சொல்வதில் வல்லவன் அல்லன். மன்னனுக்கு இவ்வளவு தெரிந்தபின் பொய் சொல்வதும் யாருக்கும் அரிது. அவன் மீண்டும் உண்மை முழுவதும் சொன்னான். அந்தோ! இதனால் அவன் தன்னை மட்டுமன்றிக் கடைக்காரர் நண்பனையும் காட்டிக் கொடுக்க வேண்டிய தாயிற்று.

பெரிகிலையும் அவன் நண்பனையும் சிறையிலிட்டு அவர்கள் செல்வ முழுதும் பறிமுதல் செய்யும்படி மன்னன் கட்டளை யிட்டான்.