சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
193
பொன்னைக் கடைக்காரனும் பெரிகிலும் எடுத்துக்கொண்டனர். மன்னன் சுமக்க மாட்டாத அளவு வாரிச் சுற்றிக் கொண்டிருந் தான்.
கடைக்காரன் மெழுகுவர்த்தியைத் தான் வாங்கிக் கொண்டான்.பெரிகில் வெளியே வந்துவிட்டான்.
விளக்கணையுமுன் கடைக்காரனும் வெளியே ஒடி வந்துவிட்டான். மன்னன் தன் பளுவான சுமையுடன் பின்தொடர்ந்து வருமுன் கதவு மூடிக் கொண்டது.
மன்னன் பாறையினுள் பூதங்களுடன் அடைப் பட்டான்.
பெரிகிலும் கடைக்காரனும் இரவே மூட்டை முடிச்சு களுடன் அந்நகர் விட்டு வெளியேறி விட்டனர். பெரிகிலின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் வேறு எதுவும் சொல்லவில்லை. மன்னன் சிறையிலிருந்து தப்பியோடி வந்ததாக மட்டும் கூறி அவர்களையும் விரைவுபடுத்திக் கூட்டிக் கொண்டு சென்றனர்.
கிரானடா மன்னன் ஆட்சி மட்டுமன்றி, அவன் பெயர் கூட எட்டாத தொலை நாட்டில், குகையின் பெருஞ் செல்வத்துடன் அவர்கள் வாழ்ந்தனர்.
மன்னன் மாண்ட கதையை மட்டும் பெரிகில் என்றும் தன் மனைவியிடம் கூறவேயில்லை.