பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

195

கடற்பாசி இயற்கை தரும் வளமானாலும், அதைத் திரட்டும் தொழில் உண்மையில் அவ்வளவு எளிதாயில்லை. கடலின் பாசிவளத்தில் மிகச் சிறு பகுதியே கரையில் ஒதுக்கப்பட்டது. பெரும்பகுதி திறந்த கடலிலேயே மிதந்து சென்றுவிடும். அத்துடன் வேலி ஏற்றத்தில் கரையில் ஒதுக்கப்பட்ட பாசியிலும், பெரும்பகுதி மீண்டும் அடித்துக் கொண்டு செல்லப்பட்டுவிடும். பாசி சேகரம் செய்பவர் வேலி ஏறி இறங்குமுன் விரைந்து தொழில் செய்து அதைத் திரட்டிவிட வேண்டும்.

பாசி சேகரிப்பவர் கையில் நீண்டு வளைந்த கழைக்கோல் இருக்கும். கரடுமுரடான, வழுக்கலான பாறைகளில் நின்றுகொண்டு, கழைக்கோலை நீட்டி நீர்ப்பரப்பில் மிதக்கும் பாசிகளையும் அரிப்பர். இவ்வேலையில் இடையூறு மிகுதி. ஏனென்றால் பாறைகள் வழுக்கும். குண்டு குழிகள் நிறைந்த பாறைகளினிடையே ஆழ்கசங்கள் இருந்தன. கடல் அடிக்கடி அவற்றினிடையே குமுறிக் கொந்தளிக்கும். ஆரிடர் மிக்க சுழிகளும் மிகுதி. இவற்றிடையே சிறிது தவறினாலும் கடலின் குமுறலுக்கும் குமிழிகளுக்கும் சுழிகளுக்கும் இரையாக வேண்டியதுதான்!

கடற்பாசித் தொழிலில் ஈடுபட்ட எல்லாருக்கும் மலாகி டிரெங்க்ளாஸ் என்றால் தெரியும். வேளாளர் நிலங்களில் பயன்படுத்தும் பாசியில் பெரும் பகுதியும் கடலகத்திலிருந்து அவன் மீட்டுக்கொண்டு வந்ததாகவே இருக்கும் - அத்தொழிலில் அவன் அவ்வளவு இரண்டற முழுநேரமும் ஈடுபட்டிருந்தான். மக்களிடையே மிகவும் வயது சென்றவர்களுக்குக்கூட எப்போதிருந்து அவன் அத்தொழிலில் ஈடுபட்டிருந்தான் என்று தரியாது. அவனை மக்கள் 'பாறையுடன் பாறையாக வளர்ந்தவன்; கடலலையுடன் அலையாக விளையாடியவன்' என்றுதான் எண்ணினார்கள். அலைகளிடையே அவன் கைகளும் பாறைகளிடையே அவன் கால்களும் அவ்வளவு இயல்பாக ஈடுபட்டுத் தொழிலாற்றி வந்தன!

மலாகியின் குடிசை செங்குத்தான பாறையின் இடையில், பாறையின் உச்சிக்கும் கடலலைக்கும் கிட்டத்தட்ட நடு உயரத்தில்தான் இருந்தது. கடலிலிருந்து பார்ப்பவருக்கு அது