சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
197
விற்றுப் பணத்தை எண்ணிப் பைகளிலிட்டுப் பெட்டியில் வைத்துப் பூட்டுவது தவிர வேறு எவ்வகையிலும் தொழிலில் ஈடுபட முடியாதவன் ஆனான்.
ஆனால் அவன் தொழில் மட்டும் நிற்கவேயில்லை.
மாலி - அவனுடன் அவன் சின்னஞ்சிறு பேர்த்தி. மாலி பாறையில் ஏறி இறங்கிப் பழக்கப்பட்டிருந்தாள். வாழ்நாளின் பெரும்பகுதியிலும் இயற்கை அவனுக்குத் தந்த வளம் இப்போதும் மாலியின் உருவில் அவனுக்குக் கிட்டிற்று என்னலாம். அவள் அவன் தளர்ந்த நரம்புகளின் தளர்ச்சி தோன்றாமல் உடனிருந்து உழைத்துப் படிப்படியாக அவன் வேலையை ஒவ்வொன்றாக அவனிடமாக நின்று தானே மேற்கொண்டு விட்டாள்.
மலாகி பாறையுடன் பாறையாக வளர்ந்ததாக மக்கள் கருதினார்களென்றால், மாலியைப் பாறை, கடல் ஆகியவற்றின் பிள்ளையாகவே கருத இடமிருந்தது. அவள் தன் தாய் தந்தையரை அறிய மாட்டாள். அவள் தாய் மலாகியின் மகள். அவள் தந்தை கப்பலுடைந்து மலாகியின் பாறை வீட்டின் பக்கம் நீந்தி வந்த ஒரு கப்பலோட்டி. மாலி பிறக்கும் முன்பே தந்தையும், பிறந்த சில மாதங்களில் தாயும் இறந்ததனால், மலாகியே அவளுக்குத் தாயும் தந்தையுமாய் அவளை வளர்க்க வேண்டி வந்தது. ஆயினும் தன் தொழிலில் இரண்டற ஈடுபட்ட அவனைவிட, மலையின் செல்வியாகிய அவன் தாய் மரபும் கடலின் செல்வனாகிய அவன் தந்தை மரபுமே உள்ளூர நின்று அவளை வளர்த்தன என்னலாம். நிலத்தின் செல்வியர்களுக்கு இருக்கும் அழகு அவளிடம் இல்லை. ஆனால் மலையின் பலமும் கடலின் தங்குதடையற்ற போக்கும் அவள் உடலில்
டங்கொண்டு வளர்ந்தன. மலைமீது மலை யாடுகளின் தடம் பிறழ்ந்தாலும் பிறழலாம். அவள் தடம் பிறழ்வதில்லை. கடலின் மீன் குஞ்சுகளுக்குத் தெரிந்த அளவு நீச்சல் அவளுக்கும் தெரிந்திருந்தது.
பாட்டன் கடற்பாசியிடையே பழகியிருந்தான். அவளோ கடற்பாசியாகவே காணப்பட்டாள். பெண்கள் அணியும் ஆடையணிகளை அவள் அறியமாட்டாள். தாம் அணிந்திருந்த ஆடைகளே கந்தையுருவில் அவள் ஆடையாயின. வெளியே