பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 36

(198) || போகும்போது மட்டும் அவற்றை உடுத்துப் பாசியுடன் பாசியாய் அவள் இருப்பாள். அலைகளைத் தவிர வேறு விளையாட்டுத் தோழர் தோழியர் அவளுக்குத் தெரியாது. சங்கு சோழிகள் அவள் விளையாட்டுப் பொருள்களாகவும் சிற்சில சமயம் அணிமணியாகவும் பயன்பட்டன. ஊரில் பாசிக்கட்டுகளைக் கொண்டு விற்பது தவிர, ஆண் பெண்கள் எவருடனும் அவள் பழகவில்லை. ஆடவரிடம் பழகும் முறை வேறு, பெண்களிடம் பழகும் முறை வேறு என்பதையோ சிறியவரிடமும் பெரியவர்களிடமும் பழகும் முறைகள் வேறு என்பதையோ அவள் அறியாள். நாணம், அச்சம் முதலிய பெண்கள் இயல்புகளை மலையாடுகள் எவ்வளவு அறியுமோ, மகர மீன்கள் எவ்வளவு அறியுமோ அவ்வளவு அறிந்திருந்தாள்.

தான் அவளும்

மலாகியிடம் மக்கள் பழகிய அளவுகூட எவரும் அவளுடன் பழகவில்லை. அவள் நடமாட்டத்தில் அத்தனை விரைவு இருந்தது. அவள் பேச்சில் அத்தனை கண்டிப்பு! அவள் பாசி விற்பனைப் பேரத்தின்போது எப்போதாவது பாசியைப் பிறரிடமிருந்து கைப்பற்ற நேர்ந்தால், அவள் கையின் வலு புயலின் வலுவாயிருந்தது. அவள் பாசிக்காக அவளை நாடிய மக்கள் பாசிகடந்து அவளுடன் பழக அஞ்சினர்.

மலாகியின் உழைப்பைவிட உழைப்பைவிட மாலியின் உழைப்புக் கடுமையாயிருந்தது. மலாகி ஒரு வாரத்தில் திரட்டும் பாசியை அவள் ஒரு நாளில் திரட்டினாள். அது மட்டுமன்று, மலாகி பாசிக்கு ஊரார் கொடுத்த விலையை ஏற்றுக் கொண்டான். மாலியோ பாசியின் விலைக்கள நிலையறிந்து, உச்ச விலைக்கே அதை விற்றாள். வேளாண் மக்களுக்கு உயிராயிருந்த அந்தப் பாசிக்கு அவள் வைத்த விலை உயர்விலையாகவேயிருந்தது. மற்ற மாந்தர் கடலினருகே போகவே அஞ்சும் கோரப் புயலிலும் அவள் புயலுடன் விளையாடிப் பாசியை மலைபோலக் குவித்து வந்ததாள், அவள் கேட்ட விலை கொடுத்து மக்கள் அதை வாங்க வேண்டியிருந்தது. மக்கள் அவள் கடுமையை வெறுத்தனர். ஆனால், மலையையும் கடலையும் எந்த அளவு மனிதர் மாற்றமுடியுமோ அந்த அளவுதான் அவள் கடுமையையும் மாற்ற முடிந்தது.