சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
199
மாலிக்கு வயது இருபதாயிற்று. ஆயினும் அவளைப் பற்றி நல்லெண்ணமோ நல்மொழியோ உடைய எந்த இளைஞனும் நங்கையும் கிடையாது. அவளைப் போற்றிப் புகழ விரும்பியவர் கிழவர் கிழவியர் மட்டுமே. வயது சென்ற பாட்டனை அவள் குழந்தையை நடத்தும் தாய் போல, அதே சமயம் முழு மதிப்புடன் நடத்தியதுதான் அவர்கள் உள்ளங்கவர்ந்த அவளது ஒரே நற்பண்பு.
மாலியின் அகவிலை காரணமாகப் பாசிக்குக் கிராக்கி மிகுந்தது.தொழிலில் போட்டியும் எழுந்தது. மலைப்பிளவில் ஏறி இறங்குவது எவ்வளவு கடு உழைப்பானாலும், அதைச் செய்ய இளைஞர்கள் முன் வந்தனர். மாலி திரட்டும் பாசியின் முன், அவர்கள் திரட்டியது மலையின் பக்கமுள்ள மண்மேடு போலத்தான் இருந்தது. ஆயினும் இம்முயற்சிகள் கண்டு மாலி புகையாமலிருக்க முடியவில்லை.
மலையும் கடலும் எவருக்கும் தனியுரிமைப்பட்டவை யல்லவே என்று இளைஞர் ஒருவரிடம் ஒருவர் முணுமுணுத்துக் கொண்டு பேசுவதை அவள் கேட்டிருந்தாள். ஆனால் மலையிடுக்கு! அத்துடன் அப்பாதையும் முற்றிலும் இயற்கையாய் அமைந்த பாதையல்லவே! படிக்கற்கள் ஒவ்வொன்றும் அவள் பாட்டன் மலாகி தொலைவிலிருந்து தூக்கி வந்தவைகள் என்பதை அவள் எப்படி மறக்க முடியும்? அவற்றுக்கு அண்டை கொடுத்து நிலைக்க வைக்கப் பொடிக்கற்களையும் பாசி கலந்த மண்ணையும் சிறுமியாயிருக்கையில் அவள் தானே தன் சின்னஞ்சிறு கைகளில் தூக்கி வந்தாள்! அவர்களுக்கும் அவர்கள் கழுதைக்கும் இருக்கும் உரிமை எப்படி ஊராருக்கும் அவர்கள் கழுதைகளுக்கும் இருக்க முடியும் என்று அவள் கள்ளமில்லா முரட்டு உள்ளம் உள்ளூர வாதாடிற்று.
ஏழைச் சிறுவர் போட்டி, மாலியை அவ்வளவாக உறுத்தவில்லை. செல்வர் வீட்டுச் சிறுவரும் இதில் வந்து கலந்து கொள்வதைக் கண்டபோது அவள் பொறுக்க முடியவில்லை. வேளாளன் ஃகன்லிஃவ் பெரும் பண்ணையாளன். அவன் நிலபுலங்களுக்கு மாலியின் பாசியுரத்தில் ஐந்தில் ஒரு பங்குக்குமேல் தேவையாயிருந்தது. அவள் கேட்ட விலையை யெல்லாம் அவன் கொடுக்க இசைந்தும் தேவையளவுக்கு