200 ||
அப்பாத்துரையம் - 36
அருந்தல் காலத்தில் பாசி பெற முடியவில்லை அவன் மகன் ஃபார்ட்டி இருபத்திரண்டு வயது இளைஞன். அவன் தானே சென்று சேகரித்து அருந்தல் காலத்துக்கும் சேமித்து வைப்பதென்று துணிந்தான். அதற்காக அவன், ஒரு கழுதையையன்று, ஒரு மட்டக் குதிரையையே வாங்கிவந்தான்.
ஏழையுரிமையில் செல்வர் போட்டி, கழுதை உரிமையில் குதிரை போட்டி என்று மாலி கறுவினாள்.
ஒரு கழுதைக்குமேல் செல்ல முடியாத பாதை இடுக்கில் அடிக்கடி ஃபார்ட்டி குதிரை நின்று மேய்ந்து கொண்டிருந்தது. இது கழுதையும் அவளும் செல்லும் இடத்தை அடைந்தது. து அவள் உள்ளம் மேலும் புகைந்தது. 'குதிரையின் கால்களை முறித்துவிடுகிறேன்' என்று கூறிக் கொண்டாள் அவள்.
அவனைக் கண்டபோதெல்லாம் அவள் சீறி விழுந்தாள்.“நீ வேளாளன் பிள்ளையாயிருக்க முடியாது; பாசி விற்பவன் பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும். உன் குதிரையும் குதிரையாயிருக்க முடியாது. அது போன தலைமுறையில் ஒரு கழுதைக்குட்டியாகத்தான் இருந்திருக்கும்” என்ற அவள் ஒருநாள் அவனை இடித்துக் கூறினாள்.
ஃபார்ட்டி அவன் வயதுக்கு முரடனல்லன். அமைதி யுடையவன்தான். ஆண்கள் அவன் செல்வம் கண்டு அவனை மதித்தனர். பெண்களோ அவன் அந்தசந்தமான தோற்றத்திலும் நாகரிக நடையுடைய இயக்கங்களிலும் ஈடுபட்டு அவனிடம் நய இணக்கத்துடன்தான் நடந்து வந்தனர். ஆகவே, மாலியின் இக்கடுமொழி அவனுக்குச் சுட்டது.
66
"இதோ பார் மாலி. வழக்காடுவது சரி. நாகரிகமாகப் பேசி வழக்காடினால் என்ன?” என்றான்.
"நாகரிகமாம்,
நாகரிகம்!
பிறர் உரிமையில்
தலையிடுவதுதான் நாகரிகமான செயல்போலும்?"
66
66
'கடல் யாருக்கும் தனி உரிமைப்பட்டதல்லவே!'
கோ! வானமும் யாருக்கும் தனியுரிமைப்பட்டதல்ல
தானே. அதற்காக உன் வீட்டுமோட்டில் ஏறி நின்று வானத்தைப் பார்க்கிறேன் என்று ஒருவன் சொன்னால்?”