சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
"இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு?"
201
"என்ன தொடர்பா! என் வீட்டு வழியாக எங்கள் கடலில் வந்து ஏன் பாசி எடுக்க வேண்டும்? நேர்மை என்பது ன்னதென்று இம்மியளவு தெரிந்திருந்தால் இது புரியுமே!”
"உன் உரிமையில் குறுக்கிடும் எண்ணம் எனக்குச் சிறிதும் கிடையாது. மாலி! நான் விற்பதற்காகப் பாசி எடுக்கவில்லை. சொன்ன விலை கொடுத்தாலும்கூட எங்களுக்கு வேண்டிய பாசியை நீ கொடுக்க மறுக்கிறாய். எங்களுக்கு வேண்டிய பாசியைத்தான் நான் எடுக்க வருகிறேன். அதுவும் என் உழைப்பாலேயே! இதில் உன் உரிமை எங்கே குறுக்கிட்டது? கடலில் அலைகள் எவ்வளவோ பாசியை உன் கடலிலிருந்து அடித்துக் கொண்டு செல்கிறதே! உன் உரிமையையா அடித்துக் கொண்டு போகிறது?"
66
66
‘கடல் கொண்டுபோகட்டும், நீ கொண்டுபோகப்படா
படாது!” 'என்னை ஒரு நண்பனாகக் கருதிக் கொள். வீண் கோபம் வேண்டாம்” என்றான் அவன்.
"நண்பன்! உன்னைப் போன்ற கேடுகெட்டவன் நட்பு இங்கே யாருக்கு வேண்டும்?" என்று கூறி அவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்துவிட்டுச் சென்றாள் மாலி.
மாலியிடமிருந்து செய்தி கேட்டபோது கேட்டபோது உள்ளூர மலாகிக்குக் கோபம் தான் வந்தது. ஆனால், ஃபார்ட்டி செல்வர் வீட்டு இளைஞன். ஆகவே அவன், "போகட்டும், விட்டுவிடு, மாலி.கடவுள்தான் அவனுக்குத் தண்டனை தர வேண்டும். அவன் அந்தப் பாசியுடன் பாசியாகக் கடலில் அழுந்திச் சாகட்டும்!” என்றான்.
“ஆம். அப்படித்தான் நேர வேண்டும், நேரும். குறளிக் கசத்தில் அவன் ஒரு நாளில்லாவிட்டால் ஒரு நாள் அகப்படாமல் போவதில்லை. அப்போது அவனைக் காப்பாற்ற நான் ஒரு சுண்டுவிரலை உயர்த்தினால், நான் மாலியில்லை!" என்று அவள் உறுமிக் கொண்டாள்.
குறளிக்கசம் - பாசிகள் மற்ற இடங்களைவிட மலாக்கியின் வீட்டை அடுத்த கடலில் மிகுதியாக ஒதுங்குவதற்குக்