சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
(205
கட்டினாள். ஆனால் குருதிப் போக்கை விடக் கிலி அவன் நாடித்துடிப்பைத் தாக்கிவிட்டது. அவன் கண்களைச் சற்றுத் திறந்தபின் மீண்டும் மூடிச் செயலற்றவனாய்விட்டான்.
அவளுக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. ஓடோடிச் சென்று பாட்டனை அழைத்து வந்தாள். செங்குத்தான மலைப்பாறை மீது அவனைக் கொண்டு செல்ல அவனாலும் உதவ முடியவில்லை. அவன் கடலருகே இறங்கி வந்ததே பெருமுயற்சி யாய் விட்டது.
ஃபார்ட்டியையும் அவளையும் கிழவன் ஏற இறங்கப்
பார்த்தான்.
"மாலி. நீ செய்த செயல் நன்றாயில்லை. நீ அவனைக் காப்பாற்றினாய் என்று யார் சொல்வார்கள்? அவனைச் சாகவிட்டிருந்தால் கூட நமக்குக் கேடில்லை. இப்போது நீ தான் கொன்றுவிட்டாய் என்றல்லவா கூறுவார்கள்?” என்றான் அவன்.
ஆனால் அவள் உள்ளமோ இப்போது வேறு எதுபற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவன் உயிருக்காக மட்டுந்தான் அது கவலைப் பட்டுத் துடித்தது. “தாத்தா! யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும்; அவனை நானாகக் கொன்றாலும் என்னால் கொல்ல முடியும். இப்படித் தெரியாத் தனத்தால் சாவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் போய் அவர் வீட்டில் சொல்லி உதவிக்கு ஆளனுப்பச் சொல்லி வருகிறேன்” என்று கூறி விரைந்தாள்.
அடாப்பழி -மாலி பாறை உச்சிவரை ஓடிச்சென் அங்கிருந்து சுற்றுமுற்றும் பார்த்தாள். இருபுறத்திலும் ஒரு காகத்தைக்கூடக் காணவில்லை. மறுபுறம் இறங்கி நகருக்குள் சென்றாள். தெருக்களெல்லாம் வெறிச்சென்றிருந்தது. புயலும் மழையும் கலந்து வீசிய அந்த நேரத்தில் எல்லாரும் கதவையும் பலகணிகளையும் சார்த்தி வீட்டில் அடைபட்டுக் கிடந்தனர். ஆனால் மாலி மட்டும் உடலுக்கோ காலுக்கோ தலைக்கோ எத்தகைய பாதுகாப்புமற்ற நிலையிலேயே தன்னை மறந்து ஓடினாள்!
ஃபன்லிஃவ் குடும்ப மாளிகையின் பக்கம் அவள் அதுவரை சென்றதில்லை. ஆனால், இன்று அவள் பரபரவென்று சென்று