சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
இனி
வருவார்கள்
(207
என்ற
எப்படியும் அவர்கள் எண்ணத்துடன் மாலி வழி நடந்தாள். அவள் உள்ளத்தில் சீற்றமில்லை; வெறுப்பும் கசப்புமே இருந்தன. "என் மீதும் என் பாட்டன் மீதுமே அவர்கள் ஐயமுறுகிறார்கள். ஆனால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. அவன் பிழைக்கா விட்டால் இந்த நன்றி நலங்கெட்ட சமூகத்தில் இருந்தாலென்ன? இல்லாது போனாலென்ன்?”
ஃபார்ட்டியுடலின் அருகில் பாட்டன் இருந்த காட்சி எண்ணத் தொடரை அறுத்தது. "தாத்தா! அவர் கண் விழித்தாரா” என்றாள்.
“இல்லையம்மா! நீ போகும்போது இருந்த நிலையிலேயே தான் அவன் இருக்கிறான்” என்றான் மலாகி.
திரு. ஃகன்லிஃவ் வருமுன் ஃபார்ட்டி ஒரு தடவை இலேசாகக் கண் திறந்தான். அவன் கண் மாலியை அரை யுணர்வுடன் வியப்புடன் பார்த்தது. ஆனால், அடுத்த கணம் அது மூடிக் கொண்டது. அதன்பின் அசைவே காணவில்லை. மாலி கலவரப்பட்டாள்.
தாய் தந்தையர் வந்து அவன் நிலையைக் கண்டதும் மீண்டும் அமளி குமளியாயிற்று. ஃபார்ட்டியை எழுப்ப முயன்றதில் பயன் ஏற்படவில்லை. இறந்துவிட்டதாகவே எண்ணினர். மீண்டும் ஐயமும் குறுக்குக் கேள்விகளும் எழுந்தன. மாலியும் கிழப்பாட்டனும் கூறிய செய்தியை அவர்கள் நம்பவில்லை. தலையிலுள்ள காயம் கண்டு அவர்கள் மாலியும் அவள் பாட்டனும் அவனைக் கல்லாலடித்துக் கடலில் தள்ளிப் பின் கதை கட்டுவதாகச் சாட்டிப் பேசி அச்சுறுத்தினர்.
உணர்வற்ற நிலையிலேயே அவர்கள் ஃபார்ட்டியின் உடலைத் தூக்கிக் கொண்டு சென்றனர். போகும்போது ஃகன்லிஃவ் மாலியிருந்த திசை நோக்கி, “குருதிக்குக் குருதி வாங்குகிறேனா இல்லையா பார்" என்று கறுவிக் கொண்டு சென்றான்.
மலாகி தன் பேர்த்தியின் செயலுக்கு முதல் தடவையாக அவளை நொந்து கொண்டான். அவளும் பித்துப் பிடித்தவள் போலானாள்.
ஆனால் அவள்தான் செய்ததற்காக