பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 36

208 || வருந்தவில்லை. அங்கும் மனச்சான்று அவள் பக்கம் நின்றது. அதோடு ஃபார்ட்டி ஒரு தடவை கண் திறந்த போது நன்றியும் ஆர்வமும் கலந்த அவன் பார்வை... அது அவள் மனக்கண் முன் நின்று எல்லா மனக்கசப்புக்கும் மாற்றமளித்தது. அவன் மட்டும் பிழைக்கட்டும்! அஃது ஒன்றே அவள் ஓயாக் கவலையாயிருந்தது.

அன்பின் வெற்றி - காலையில் யார் என்ன சொன்னாலும்

சொல்லட்டும் என்று அவள் ஃபார்ட்டியின் நலம் உசாவச் சென்றாள். இரவு முழுவதும் அவன் அப்படியேதான் கிடந்திருந்தான். இறந்துவிட்டதாக முடிவு கட்டிய தாய் தந்தையரும் பிறரும் அழுதரற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் அவன் இறந்திருக்க முடியாது என்று மாலி எண்ணிக் கொண்டு அருகே சென்றாள். அவன் கை சற்றே ஆடியது. உடனே அவள், "ஃபார்ட்டி இறந்து போகவில்லை, ஃபார்ட்டி இறந்து போகவில்லை. உயிருடன் இருக்கிறார்” என்று கூவினாள்.

தாய் ஓடோடி வந்து, "ஃபார்ட்டி என் கண்ணே! நீ பிழைத்துவிட்டாயா?" என்று கேட்டாள்.

ஃபார்ட்டி மெள்ளக் கண் திறந்தான். தாயின் முகம் அவன் கண்ணில் பட்டது. ஆனால், அவனால் பேச முடியவில்லை. கண்களும் விரைவில் மூடிக் கொண்டன. ஆனால் அந்த நிலையிலும் அவன் “மாலி... மாலி எங்கே?" என்று முனகினான்.

மாலி அவனைக் கொன்றிருக்க முடியாது என்பதற்கு இந்த ஒரு சொல்லே அண்டையிலுள்ளவர்களுக்குச் சான்றாயிற்று. அவன் பிழைத்துக் கொண்டான் என்ற மகிழ்ச்சியைத் தன் பாட்டனிடம் சொல்ல அவள் ஒடோடிச் சென்றாள்.

அன்று மாலையெல்லாம் ஃபார்ட்டி பிழைத்தது பற்றிய மகிழ்ச்சியுடன் வழக்கம்போலத் தன் வேலையில் ஈடுபட்டாள். இருள் கவிந்துவிட்டது. கழைக் கோலினால் கடைசிப் பாசிச் சுருளைக் கரைமீது கொட்டிக்கழுதையுடன் திரும்ப எண்ணினாள். அச்சமயம் ஒரு விளக்கொளி பாறை உச்சியிலிருந்து அவளை நோக்கி வந்து கொண்டிருந்தது.

வந்தது திரு ஃகன்லிஃவ். அரையிருளிலிருந்தே அவன் "யாரது! மாலியா?" என்றான்.