பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

66

209

“ஆம்! ஃபார்ட்டிக்கு எப்படி இருக்கிறது?” என்று அவள்

உசாவினாள்.

"நீயேதான் வந்து பார்க்க வேண்டும் மாலி! அவன் உன்னிடம் பேசிய பின்தான் எதுவும் அருந்துவேன் என்று பிடிவாதம் செய்கிறான்” என்றான்.

ஃபார்ட்டியின் உயிர் தன் மீது ஏற்பட்ட ஐயப் பேயையும் அடாப்பழியையும் முற்றிலும் மாற்றிவிட்டது என்பதை மாலி ஒரு நொடியில் ஊகித்துக் கொண்டாள். “ஃபார்ட்டி விரும்பினால் நான் வருகிறேன்” என்று கூறிப் பாட்டனிடம் சென்றாள். கிழவன் மலாகிக்குக் கொஞ்ச நஞ்சம் காலையில் மீந்திருந்த அச்சமும் அகன்றது.“போய்ப் பார்த்துவிட்டு விரைவில் வா அம்மா!” என்று கூறி மாலியை அனுப்பினான்.

ம்

பணியாட்களின் ஐயப்பார்வைகளின் தடையில்லாமல் ஃகன்லிஃவ் மாளிகையில் அன்றுதான் இவள் இயல்பாகச் சென்றாள். ஆனால், இம் மாறுதலை அவள் கவனிக்கவில்லை. ஃபார்ட்டி இன்னும் உடல் நலிவுடன் எழுந்திருக்க முடியாமல் தான் இருந்தான். மாலி அருகே செல்லும் போதே அவன் 'மாலி வந்துவிட்டாளா?' என்று கேட்டது அவள் செவிப்பட்டது.தாய் இதோ மாலி வந்திருக்கிறாள்' என்றாள்.

'மாலி! என் உயிரை நீ காப்பாற்றியதற்கு நானே உன்னிடத்தில் நேரில் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்' என்றான்.

அதே சமயம் திருமதி ஃகன்லிஃவ், "நாங்களும் உன்னை ஐயுற்றுக் கடுமொழிகள் கூறியதற்கு மன்னிப்புக் கோருகிறோம். நாங்களும் நன்றி தெரிவிக்கிறோம்" என்றாள்.

"நான் செய்த செயலுக்கு நான் என்றும் வருந்தியிருக்க மாட்டேன். ஆனால், அது பயனடைந்து நீங்கள் பிழைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்" என்றாள் மாலி.

ஃபார்ட்டி "இனி னி நீ

என்னை

நண்பனாகக்

கருதலாமல்லவா?” என்றான்.

“தாராளமாக! ஏன்?” என்று கேட்டாள் வியப்புடன்.