26. நாரை அரசு
பல நூறு ஆண்டுகளுக்குமுன் பாரசீக நாட்டில் மசூக் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் இன்ப விருப்பினன். இரக்க நெஞ்சுடையவன். ஆனால் முன் கோபி. சிறிது அடம் பிடிப்பவன். ஆயினும் அவன் தீய குணங்களுக்கு அவன் குடிகள் ஆளாக வில்லை. அவர்களுக்கு அவன் நல்லரசனாகவே இருந்தான். அவனது தீயகுணங்கள் யாவும் அவனிடம் மாறாப் பற்றுடைய நல்லமைச்சனிடமே காட்டப்பட்டன.
மசூக்கின் நல்லமைச்சன் மன்சூர் வயது சென்றவன். உடல் பருத்து ஆள் அருவருப்பான தோற்றமுடையவனாயிருந்தாலும் அவன் அறிவிற் சிறந்தவன். தங்கமான குணம் உடையவன். மன்னனிடம் அவன் கொண்ட பற்றுக்கு எல்லையில்லை. மன்னன் விருப்பத்துக்கும் கோபதாபங்களுக்கும் ஏற்ப நடக்கும் அவன் பொறுமைக்கும் எல்லையே கிடையாது. ஒரு சமயம் ஏதோ காரணத்தால் கோபித்து அமைச்சன் முகத்தில் மன்னன் எட்டி உதைக்க அவன் பற்கள் இரண்டும் போய் விட்டன. மற்றொரு சமயம் மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது அவன் வியைாட்டுக் குறும்பின் சின்னமாக மன்சூரின் ஒரு கண் போயிற்று. ஆனால் இத்தகைய இன்னல்கள் கூட மன்சூரின் பணிவிணக்கத்தையோ, மன்னனிடம் அவன் கொண்ட பாசத்தையோ குறைக்கவில்லை.
மசூக்குக்கு இஸ்லாம் நெறியில் அளவற்ற பற்று. பாரசீக மக்களிடையே இன்னும் நிலவிவந்த பழைய ஜாதுஷ்டிர நெறியையும் புத்த நெறியையும் அவன் வெறுத்தான். தான் மேற்கொண்ட மெய்ந்நெறியை ஏற்க மறுத்தவர் யாரும் பாரசீக நாட்டில் இருக்கக் கூடாதென்று அவன் கட்டளையிட்டான். புறச்சமயத்தவர் பலர் இதனால் தண்டிக்கப்பட்டனர். பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். கஸ்ரூ என்ற மாயாவி