(214) ||.
அப்பாத்துரையம் - 36
மாயப்பொடி - அவன் கருதியது தவறன்று. கிழவியிடம் இருந்த பொருள்கள் எல்லாமே அரசனுக்குப் பிடித்திருந்தன. ஒவ்வொன்றையும் ஆவலுடன் பார்த்தபின் அத்தனையையும் ருங்கே விலைபேசி வாங்கி விட்டான். ஆனால், தட்டு முழுவதையும் அரசனிடம் ஒப்படைக்கும் போது கிழவி ஒரு சிறு புட்டியை மட்டும் தனியாக மறைத்தெடுத்து இடுப்பில் ஒளித்து வைக்கப் போனாள். அரசன் அதுகண்டு “எனக்குரிய பொருளை ஒளிக்கப் பார்க்கிறாயா?" என்று சீறினான்.
அவள் நடுநடுங்கி, “ஐயா! இஃது ஒன்றுமில்லை. ஒரு சிறு புட்டி. யாருக்கும் உதவாது. எங்கள் குடும்ப உரிமைப் பொருளாதலால், எனக்கு மட்டுமே அருமை உடையது’ என்றாள்.
"வெறும் புட்டியா? அதில் என்ன இருக்கிறது?"
""
“ஒன்றுமில்லை, ஆண்டவரே! ஒரு சிறிது வெள்ளைத் தூள்
மட்டும்தான்!”
66
ஓகோ, நஞ்சு, நஞ்சு! ஆகா, அப்படியா செய்தி? இதோ உன்னைத் தூக்கிலிடுகிறேன் பார்!” என்று அரசன் இரைந்தான். அமைச்சன் இடையில் வந்து தடுக்காவிட்டால், அவன் அவளைக் கொன்றே இருப்பான்!
கிழவி எண்சாணும் ஒரு சாணாகக் குறுகி, “ஐயா! அது நஞ்சல்ல என்று காட்ட நானே அதை உட்கொள்கிறேன், பாருங்கள்!” என்றாள்.
அரசன் கோபம் குறும்பாக மாறிற்று. அவன் கிழவியின் நீண்டு வளைந்த மூக்கை இரு விரல்களால் இறுகப் பிடித்துக் கொண்டான்.புட்டியிலுள்ள தூளில் ஒரு கரண்டி அவள் நீட்டிய நாக்கிலிடப்பட்டது.
தூள் நாக்கிலிடப்பட்டதுதான் தாமதம். மன்னன் கைப்பிடியிலிருந்த மூக்கையும் காணோம்; நாக்கையும் காணோம். அவற்றிற்குரிய கிழவியையும் காணவில்லை. மன்னன் கைப்பிடி மட்டும் மூக்கைப் பிடிக்கும் பாவணையில் வெட்ட வெளியில் எதையோ பிடித்துக் கொண்டிருப்பது போல் தொங்கிற்று.