சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
215
ஒரு மாடப்புறா மன்னன் கையினிடையே ஓடிப் பக்கத்திலுள்ள மரத்தில் அமர்ந்து, பின் நகரைக் கடந்து பறந்தது.
கிழவி எப்படி மறைந்தாள் என்று எல்லோரும் மலைப்பும் திகைப்பும் அடைந்தனர். தூள் ஒரு மாயத் தூளாயிருக்கலாம். ஏனென்றால், திடீரென்று பறந்து சென்ற மாடப்புறாவாக அவள் மாறியிருக்கக்கூடும் என்றான் மன்சூர்.
ம்
தூளை இன்னொருவனுக்குக் கொடுத்துப் பார்க்க அவர்கள் விரும்பினார்கள். மன்னன் அமைச்சன் பக்கம் குறும்பு நகையுடன் திரும்பினான். ஆனால் அமைச்சனுக்கும் இத்தகைய காரியங்களில் கைப்பாவையான ஓர் ஆள் இருந்தது. அதுவே அரண்மனைப் பணியாட்களின் தலைவன் ஹட்ஜ்பட்ஜ். அவன் வேண்டா வெறுப்பாக அத்தூளை அருந்தவேண்டி வந்தது. ஒரு கரண்டி அருந்தியும் எந்த மாறுதலும் காணவில்லை. கரண்டி மேல் கரண்டி அவன் வாயில் திணிக்கப் பட்டும் எந்தப் பயனும் ஏற்படாதது கண்டு, எல்லோரும் ஏமாற்றமடைந்தனர். ஹட்ஜ்பட்ஜ் மட்டுந் தான் தப்பினேன் பிழைத்தேன் என்று மகிழ்ச்சியுடன் நழுவி ஓடினான்.
-
தூளின் மருமம் தூளின் மருமம் அறியப் பல ஆராய்ச்சிகள் நடைபெற்றன. புட்டியை மூடப் பயன்படுத்தி இருந்த தாள் சுருளில் ஏதோ எழுதப்பட்டிருந்தது என்பது தவிர வேறு எதையும் எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அத்துடன் அவ்வெழுத்துகள் எவருக்கும் புரியாத வடிவம் உடையனவா யிருந்ததனால் அதன் செய்தியும் தெரியவில்லை.
மன்னன் அவைப் புலவர்களெல்லாரும் இது தமக்குத் தெரியாத ஏதோ புதுமொழி என்று கூறிக் கைவிரித்தனர். ஆனால் மன்னன் அமைச்சனிடம், “நாளை உச்சிப் பொழுதுக்குள் இதை யாரைக் கொண்டாவது நீ புரிய வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் தலை போய்விடும்" என்றான்.
உச்சிப்பொழுதுவரை அவைப் புலவர் மூளையைக் குழப்பிக் கொண்டனர்.அமைச்சனோ என்றும் தொழாத முறையில் எல்லா நெறிகளுக்கும் உரிய தெய்வங்களுக்கும் மாறிமாறித் தொழுகை புரிந்தான். ஆனால் உச்சிப் பொழுதில் “அம்மொழி எனக்குத் தெரியும்” என்று கூறி ஒருவன் வந்தான். அது பாலி மொழி,