சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5
217
குயிலுருவிலும் மயிலுருவிலும் இருவரும் அடிக்கடி சென்று பிறர் அறிய முடியாத பல செய்திகளையும், பிறர்மறை செய்திகளையும் அறிந்து உலாவினர். இந்த உலாவில் ஒரே ஒரு புது நிகழ்ச்சிதான் மன்னனுக்கு அதிர்ச்சி தந்தது. ஒரு தடவை ஈ உருவெடுத்து ஒரு மதில் பக்கம் குந்தியிருக் கையில் மன்னனை ஒரு சிலந்தி பரபரவென்று வந்து விழுங்க விருந்தது. அமைச்சன், ஈ மன்னனை வெடுக்கெனக் கடித்திழுத்துச் சென்றிராவிட்டால் மன்னன் சிலந்தியின் வயிற்றுக்கு இரையாகியிருப்பான். மாற்றுருவில் ஏற்படும் இவ்விடையூறறிந்து அவர்கள் அது முதல் ஈ முதலிய நோஞ்சல் உயிர் வடிவம் எடுப்பதில்லை.
மாய நாரைகள் - ஒருநாள் மன்னனும் மதியமைச்சனும் கடற்கழிகளின் பக்கமாக உலவிக் கொண்டிருந்தனர். அவர்கள் உடைபொதுநிலை உடையாயிருந்ததனால், யாரும் அவர்களை மன்னனென்றும் மதியமைச்சனென்றும் கண்டு கொள்ள முடியாது.கடலடுத்த ஏரிக்கரையில் அவர்கள் கண்ட ஒரு காட்சி அவர்கள் ஆர்வத்தைத் தட்டி எழுப்பிற்று. ஓர் அழகிய பால்வண்ணச் செங்கால் நாரையிடம் சென்றனர்.
செங்கால் நாரை தன் நாரை விருந்தினரைக் கண்டு அகமகிழ்ந்து ஒரு மீன் துண்டத்தை விருந்தாக அளித்தது. அரச நாரையோ நாரையுருவிலிருந்தாலும் அரசனானதால் நாரை உணவை உண்ண விரும்பவில்லை. அது கண்ட செங்கால் நாரை அதனிடம் இன்னும் பரிவுடன் பழகிற்று. அப்போது அமைச்ச நாரை அதன் ஆட்டபாட்டத்தின் காரணம் கேட்டது. அதற்குச் செங்கால் நாரை அழகிய குழைவு நெளிவுடன், 'அதுவா, நாரை அரசனும் பெருமக்களும் கூடிய அவையில் நான் முதன்முதலாக ஆடல் அரங்கேற்றப் போகிறேன். அதற்காகப் பழக்கிக் கொள்கிறேன்' என்று கூறிப் பின்னும் ஒருமுறை தன் நீண்ட கழுத்தை வளைத்துக் கால்களை முடக்கிக் கண்களை உருட்டிக் காட்டிற்று. அது கண்ட அரச நாரைக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அறிவாற்றல் மிக்க அமைச்ச நாரையும் அரசன் செய்வது போல் செய்யும் பழக்க மிகுதியால் சிரித்தது. தன்னைக் கண்டு சிரித்த விருந்தினர் மீது கடுங்கோபங் கொண்டு செங்கால் நாரை பறந்து போய்விட்டது.
மன்னன் நாரையும் மதியமைச்சன் நாரையும் இப்போது மனித உருவம்பெற முயன்றன. ஆனால், அந்தோ! பழைய