(218) ||_
அப்பாத்துரையம் - 36
உருவமடைவதற்கான மந்திரத் தெய்வத்தின் பெயர் நினைவுக்கு வரவில்லை. தாம் செங்கால் நாரையின் ஆடல் கண்டு சிரித்ததற்கு இப்போது மன்னன் வருந்தினான். மதியமைச்சனும் வருந்தினான். நாரை தந்த உணவை உண்ணாததால் கடும்பசி உண்டாயிற்று. ஆனால், இப்போதும் மன்னன்நாரை யுணவை நாடவில்லை. அரசவை உணவையே நாடினான். தங்கிடமும் வேறு காண முடியாமல் அவர்கள் அரண்மனை நோக்கிப் பறந்து சென்றனர்.
அரசனுக்காகக் கொண்டுவரப்பட்ட உணவு திரும்பக் கொண்டு போகப்பட்டது. அரசன் அதை அணுகுமுன் பணியாட்கள் அவனைத் துரத்திவிட்டனர். அதைப் பணியாட்களே தின்பதையும் அரசன் கண்டான். இரவு முற்றிலும் பட்டினி கிடந்தபின் காலையில் வேறுவழியின்றி இரு நாரைகளும் ஏரி தேடிச் சென்று மீன் நாடி உண்டன.
ரு
மன
மன்னனும் அமைச்சனும் ம் நாரைகளாகவே வருத்தத்துடன் நாடும் காடும் திரிந்தனர். மக்களோ மன்னனை நெடுநாள் காணாததால் பருகச்ச நகரிலிருந்த மாயாவி கஸ்ரூவையே அழைத்து மன்னனாக்கினர்.
மாயாவி மன்னனாகப் பவனி வந்தான். மன்னன் நாரை வடிவில் செயலற்றுப் பார்த்துக் கொண்டு பறந்து திரிந்தான்.
கிழவியாக வந்து பொடி விற்றதும், நாரையாக வந்து தம்மை ஆவலூட்டிச் சிரிக்க வைத்து நாரையாக்கியதும் அந்த மாயாவியே என்று அமைச்ச நாரை உணர்ந்து கொண்டது. ஆனால் மாயாவியின் மாயத்தில் அதன் நன்மதி சிக்குண்டு கிடந்தது.
மாய ஆந்தை - மாய நாரைகளிரண்டும் எங்கும் திரிந்தன. மன்னன் நாரை அடிக்கடி மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று கருதும். ஆனால், அமைச்சன் நாரை மாயாவிகளின் பழங்கதைகள் பலவற்றை எடுத்துரைத்து,“மாயம் எப்போதும் சில காலந்தான் வெல்லும்; அஃது இறுதியில் அழிவது உறுதி" என்று அறிவுறுத்தித் தேற்றிற்று.
ஒருநாள் நாரை மனிதமொழியிலேயே மனங்கவரு ம் சோகப் பாடல் ஒன்றைக் கேட்டு மருட்சி கொண்டது. பாட்டு ஓசை வந்த திசையில் சென்று இரண்டும் தேடின. அப்போது