பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

219

முழுநிலா எறித்துக் கொண்டிருந்தது. நீரோடைகளிலெல்லாம் பாலோடைகள் பளபளத்தன. நாணற் கொடிகள் அப்பாலோடைகளை நாடி வளையும் கருநாகங்கள்போல் காட்சியளித்தன. அவற்றைப் பார்த்துத் தூங்கிய ஏக்கக் கண்களுடன் ஓர் ஆந்தை பட்ட மரக்கொம்பொன்றில் பரிவுடன் குந்தியிருந்தது. பாட்டுப்பாடுவது அந்த ஆந்தைதான் என்று கண்டு அரசன் நாரையும் அமைச்ச நாரையும் அதனிடம் சென்று மனித மொழியிலேயே பேச்சுக் கொடுத்தன. ஆந்தையும் மனிதமொழி தெரிந்த நாரைகளைக் கண்டு வியப்படைந்து, தானும் மனித மொழியிலேயே பேசிற்று.

66

‘ஆந்தை நங்கையே! உன் பாட்டின் இசை என்னைப் பரவசப் படுத்துகின்றது. நீ ஆந்தையன்று.ஓர் அரசிளங் குமரியாயிருக்க வேண்டும்" என்று மன்ன நாரை புகழ்ந்தது.

"ஆம்! நாரையரசே! நான் இந்துஸ்தானத்து மன்னன் மகள் ரோது மக்கன்தான். ஒரு மாயாவி என்னைத் தன் மகனுக்கு மணம் செய்விக்க எண்ணினான். நான் இணங்காததால் ஒரு மாயப்பழத்தைத் தின்ன வைத்து ஆந்தையாக்கிவிட்டான். ான். நான் என் தந்தையையும் சுற்றத்தாரையும் பிரிந்து இரவில் இடுகாடும் பாழ்வெளியும் திரிந்து வருந்துகிறேன்” என்று ஆந்தை நங்கை இனிய சோகக்குரலில் அழுதது. மன்னனும் உடனழுதான்.

ஆந்தை மீண்டும் மன்னனைப் பார்த்து "நாரை இளைஞரே! நீரும் நாரையாயிருக்க முடியாது. நல்ல நாகரிகமுடையவராயும் காணப்படுகிறீர். நீர் யாரோ?” என்றது.

மன்னன் நாரை "ஆம். நானும் ஓர் அரசன்தான். இதோ என் தோழன் என் அமைச்சன்" என்று கூறித் தன் கதையைச் சொல்லிற்று.

ஆந்தை, “ஆகா! நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.பாரசீக அரசன் மசூக்கும் அமைச்சன் மன்சூரும் திடீரென்று காணாமற் போய்விட்டார்கள் என்று. நீங்கள் நாரையாகவா வாழ்கிறீர்கள். அது கேட்டு நான் வருந்துகிறேன். ஆனால் இன்னொரு வகையில் நான் மகிழ்கிறேன். எனக்கு ஒரு நாரையால் நன்மை ஏற்படும் என்று என் இளமையில் ஒரு குறிகாரன் கூறியிருந்தான்.என்னை நீர் மணந்து கொள்ள இசைந்தால் எனக்கு மகிழ்ச்சி உண்டாகும்” என்றாள்.