(222)
அப்பாத்துரையம் - 36
ன்
ஆனா னால், தற்செயலாகப் படகோட்டியின் பெயரே நாரைகள் மறந்துவிட்ட இறைவன் பெயர் ‘புத்தகுரு' வாயிருந்தது. இந்துஸ்தானத்து மன்னன் படகோட்டியை ‘புத்தகுரு' என்று அழைத்துப் பேசினான். அந்தப் பேரைக் கேட்டவுடன் இரண்டு நாரைகளும் துள்ளிக் குதித்தன. கிழக்கு நோக்கி நின்று அவசர அவசரமாக தலையை மூன்று தடவை தாழ்த்தின. இரண்டும் ஒரே மூச்சில் ‘புத்தகுரு' என்றன. உடன் இந்துஸ்தான அரசன், ளவரசி ஆகியவர்களின்முன் இரண்டு நாரைகளிருந்த டத்தில் அழகும் இளமையும் மிக்க ஓர் அரசனும் கிழ அமைச்சர் ஒருவரும் நின்றனர்.
மன்னன் உடலில் வழக்கமான பாரசீக அரசன் உடையும் டைவாளும் கிடந்தன. வைரங்கள் பதித்த அந்தப் பளபளப்பான உடைவாள் இந்துஸ்தானத்து அரசன் கண்களைப் பறித்தன. வாளின் தலையில் அந்த வாளைவிட ஒளிவீசும் மணிக்கல் ஒன்று கண்களைப் பறித்தது. அஃது உண்மையில் ஒரு நூற்று நாற்பதினாயிரம் பொன் பெறுமானமுள்ள அந்நாளைய உலகின் மிகச் சிறந்த மணிக்கல் ஆகும். இளவரசி அந்த மணியையும் வாளையும் பாரசிக அரசன் முகத்தையும் மாறி மாறி மலைப்புடன் பார்த்தாள்.
இந்துஸ்தானத்து அரசன், பாரசீக அரசனை முறைப்படி வணக்கம் செய்து வரவேற்றுத் தழுவினான்.
பாரசீக அரசன் மசூக் இளவரசியின் முன் மண்டியிட்டு, “உனக்கு வாக்களித்தபடி உன்னை மணக்க விரும்புகிறேன். உன் விருப்பமும் என் சோதர அரசன் விருப்பமும் அறியக் காத்திருக்கிறேன்” என்றான்.
இந்துஸ்தானத்து அரசன் மனமகிழப் பாரசீக அரசன் மசூக் இளவரசி ரோதுவை மணந்து அணி செய்விக்கப் பெற்ற உச்சைனி நகரத் தெருக்களில் ஊர்வலம் வந்தான்.
சில நாட்களுக்குள் மாமனிடமும் மனைவியிடமும் பிரியா விடைபெற்று, நூறாயிரம் படைவீரருடன் பாரசீகத்தின்மீது மசூக் படையெடுத்துச் சென்றான். கஸ்ரூ போரில் தோற்றுக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டான். அவன் மகன் ஆமீன் ஆதாப் அவன் தந்தையின் மாயத்தாலேயே ஒரு நாரையாக