பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

(223

மாற்றப்பட்டு உருமாறி வெளியே போகாதபடி ஒரு பெரிய கூண்டில் அடைபட்டு வாழ்நாள் முழுதும் அல்லற்பட்டான்.

மசூக் தன் மனைவியான இந்துஸ்தானத்து இளவரசியை அழைத்து அவளுடன் மீண்டும் பட்டஞ் சூட்டிக் கொண்டான். மதியமைச்சன் மன்சூரை அவன் இதன்பின் என்றும் தன் கடுஞ் சீற்றத்துக்கும் குறும்புக்கும் ஆளாக்காமல், அன்பாக நடத்தினான். அவன் அறிவமைந்த நல்லுரையுடன் ஆட்சி இனிது நடந்தது.