பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ஆற்றுமுயல்

உருசிய நாட்டுக் கதை

ஒரு சிற்றூரில் ஓர் ஏழைக்குடியானவன் இருந்தான். அவன் கடுமையாக உழைக்கும் திறம் உடையவன். அத்துடன் சுறுசுறுப்பும் அறிவுக் கூர்மையும் உடையவன். ஆனால், அவன் மனைவி இதற்கு நேர்மாறாக இருந்தாள். அவள் வாயாடியாகவும் விவரமற்ற வளாகவும் இருந்தாள். ஆயினும், அவள் கணவனிடம் பாசமுள்ளவள். சூதுவாதற்றவள். குடியானவன் தன் மனைவியிடம் அன்பாகவே இருந்தான். ஆனால், அடிக்கடி அவள் சூதுவாதற்ற தன்மையினாலும் வாயாடித்தனத்தாலும் அவனுக்கு இக்கட்டுகள் ஏற்பட்டன. இவற்றை அவன் தன் அறிவுத் திறத்தால் சமாளித்து வந்தான்.

ஒருநாள் குடியானவன் தன் தோட்டத்தில் மண்வெட்டி கொண்டு வேலைசெய்து கொண்டிருந்தான். மண்வெட்டி ‘டங்' என்று எதன்மீதோ பட்டு ஓசையிட்டது. அவன் சற்று ஆழமாகக் கல்லினான். அவனுக்கு வியப்பாயிருந்தது. அது ஒரு இரும்புப்பெட்டி. அது மிகவும் கனமாயிருந்தது. ஏனென்றால், அதில் பொன்னும் வெள்ளியும் மணிகளும் நிரம்பி இருந்தன.

குடியானவன் பொழுது சாய்ந்து ஒளிமங்கும்வரை காத்திருந்தான் அதன்பின் அவன் மனைவியிடம் சென்றான். செய்தியைச் சுருக்கமாகக் கூறினான்; அதை ஒருவரே தூக்க முடியாதாதலால், மனைவியையும் துணையாகக்கொண்டு, வீட்டிற்குள் கொண்டுவந்தான்.

புதையல் கிடைத்த மனை குடியானவனுக்கு உரியதல்ல. அவர்கள் பண்ணைக் குடிகள். புதையல் எடுத்தது பற்றிப் பண்ணையாருக்குத் தெரிந்தால், அவர் அதை முழுவதும் தனக்கே எடுத்துக்கொள்வார். ஒரு செப்புத்துட்டுக்கூட