பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

(225

அவர்களுக்குக் கொடுக்கமாட்டார். ஆகவே, அவருக்குத் தெரியாமல் அதைச் சிறுகச் சிறுக எடுத்துச் செலவுசெய்ய அவன் எண்ணினான்.

தற்போதைய செலவுக்குச் சிறிதுபணம் எடுத்துக்கொண்டு அவன் பெட்டியைப் புதைத்து வைத்தான். புதைத்துவைக்கும் போது மனைவியும் உடனிருந்தாள். அந்த இடத்தில் நீரூற்றிப் புல்கரண் பதியவைக்க வேண்டும் என்றான் குடியானவன். ஆகவே, அவள் தண்ணீர் கொண்டுவரச் சென்றாள்.

குடியானவனுக்கு இப்போது புதையலைப்பற்றி ஒரே ஒரு கவலை இருந்தது. அவன் மனைவி அதை யாரிடமாவது எப்போதாவது சொல்லாமல் இருக்க முடியாது. இதற்கு என்ன செய்வது என்று அவன் இருந்து ஆராய்ந்தான்.

முதலில் அவன் மனைவி வருவதற்குமுன், புதைத்த டத்திலிருந்து புதையலைத் தோண்டி எடுத்தான். அதை வேறோர் இடத்தில் புதைத்து மறைத்தான். புதைத்த இடத்தில் அவன் ஒரு சிறு மரக்கன்றை நட்டு வைத்தான்.

மனைவி திரும்பிவந்தபின், முதலில் புதைத்த இடத்தின் மீதே புல்கரண் பதித்துத் தண்ணீர் ஊற்றினான்.

நள்ளிரவில் மனைவி படுக்கையில் புரண்டு நெளித்துக் கொண்டாள். அவளுக்குப் புதையலின் எண்ணம் வந்தது. அது பற்றிக் கணவனிடமாவது பேச வேண்டும் என்று அவள் நாக்குத் துடித்தது. குடியானவன் இந்தக் குறிப்பை அறிந்தான். அவன் திடுமென விழித்தெழுபவன் போல எழுந்து மனைவியையும் தட்டி எழுப்பி உட்கார வைத்தான். ஏதோ முக்கியமான செய்தி கூறுபவன்போல முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, விடிந்தது விடியாமல் நாம் எழுந்து காட்டுக்குப் போக வேண்டும், என்றான். அவள், “ஏன்?” என்றாள்.

66

55

"காட்டில்

என்றான்.

நாளை நாம் மீன்பிடிக்கப் போக வேண்டும்,”

அவன் சிரிக்காமல் சொன்னதால், அவளும் ஐயப்படாமல் நம்பிக்கையுடன் கேட்டாள். சிறிதுநேரம் கழித்து அவள்