அப்பாத்துரையம் - 36
(226) ||- மீட்டும் நெளித்தாள். குடியானவன் மீட்டும் அவளை எழுப்பினான்.அவள், "என்ன, என்ன?" என்றாள்.
66
இப்போது சற்று நேரத்திற்குமுன் சடசடவென்று ஓசை கேட்டது. வெளியே பார்த்தேன்; மழையே இல்லை. அதனால் காட்டில் அப்பமழை பெய்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்," என்றான்.
அவள் அதையும் அட்டியில்லாமல் நம்பிவிட்டாள்.
விடிய இரண்டு யாமம் இருக்கும்போது அவள் பின்னும் நெளிந்தாள். இத்தடவை அவன் அவளிடம், “நான் நேற்று மாலையில் ஆற்றில் தூண்டில் போட்டு விட்டு வந்தேன். இரவில் அதில் ஏதாவது முயல் அகப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்,” என்றான்.
66
“ஆற்றில் மீன்தானே அகப்படும். முயல் அகப்படுமா?" என்று அவள் கேட்டாள்.
66
"அதற்குத்தான்
இரவில் தூண்டி ல் போடுவது. தண்ணிருக்குள் இருக்கும் முயல்கள் இரவில்தான் தூண்டிலில் சிக்கும்," என்றான் அவன். சூதுவாதற்ற அவன் மனைவி அதையும் அப்படியே நம்பித் தன் நெஞ்சிலுள்ள செய்திப் பட்டியலில் குறித்துக் கொண்டாள்.
க
விடிய ஒரு யாமத்தில் குடியானவன் மெல்ல எழுந்தான். மனைவி இப்போது நன்றாகத் தூங்கினாள். அவனிடம் முந்தினநாள் பிடித்த ஒரு முயலும், உணவுக்காக வாங்கிய தித்திப்பு அப்பங்களும், புதிதாகப் பிடித்த சில மீன்களும் இருந்தன. அவற்றையும் தூண்டிலையும் கையில் எடுத்துக் கொண்டான் காட்டில் அடையாளம் தெரியும் இடங்களாகப் பார்த்துப் புதர் மறைவில் மீன்களை வைத்து மூடினான். தித்திப்பு அப்பங்களை இலைமறைவான இடங்களில் கிளைகளில் கட்டி, அந்த டங்களைக் கீழே அடையாள மிட்டுக் குறித்து வைத்தான்.
தன் கையிலிருந்த முயலைத் தூண்டில்முள்ளில் குத்தி ஆற்றில் இட்டான். இவ்வளவும் செய்துவிட்டு அவன் திரும்பி வீட்டுக்கு வந்து ஒன்றுமறியாதவன் போலத் தூங்கினான்.