பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

(227

மனைவி விடிந்தவுடன் எழுந்தாள், கணவனைத் தட்டி "காட்டுக்குப் போகவேண்டாமா?”

எழுப்பினாள்.

எழுந்திருங்கள், எழுந்திருங்கள், என்றாள்.

அவன் திடுதிடுப்பென்று எழுந்து "ஐயையோ, தூங்கி விட்டேன். வா, விரைவில் போவோம். அப்பங்களைப் பறவைகள் தின்றுவிடப்படாது,” என்றான். காட்டில் குடியானவன் சில புதர்களைக் கிளப்பி மண்ணைக் கிளறினான். அதில் சில மீன்கள் அகப்பட்டன. அதைக் கண்ட மனைவி கைகொட்டி ஆர்ப்பரித்து ‘ஆகா, காட்டில் மீன், காட்டுமீன்," என்று குதித்தாள்.

66

66

இது ஒரு வியப்பா? இது ஆண்டுக்கு ஒரு தடவை இருதடவை கிடைப்பதுதானே!” என்றான் குடியானவன்.

சில மரங்களருகில் நின்று கழியால் இலைகளைக் கலைத்தான். தித்திப்பு அப்பங்கள் தொங்கின. "பார்த்தாயா, அப்பமழை பெய்தபோது இவை மரங்களில் சிக்கிக்கொண்டன. கீழே விழுந்தவற்றைப் பறவைகளும் உயிரினங்களும் தின்று விட்டன, என்றான். அப்பங்களை அவள் மகிழ்ச்சியுடன் முந்தானையில் கட்டிக் கொண்டாள்.

ஆற்றங்கரையில், அவன் தூண்டிலின்பிடி கிடந்தது. அவன் தூண்டிலை இழுத்தான். அதில் சிக்கியிருந்த முயல் வெளிவந்தது. "பார்த்தாயா, இதுதான் ஆற்றுமுயல்," என்றான். மனைவி, “இது நம் காட்டு முயல் மாதிரியே இருக்கிறதே,” என்றாள்.

அவன், “ஆம். காட்டாற்றில் இருப்பது பின் வேறு எப்படி இருக்கும்," என்றான். இரண்டு மூன்று நாளாயிற்று. ஊரெங்கும் குடியானவனுக்குப் புதையல் கிடைத்த செய்திபற்றிய பேச்சே பேச்சாயிருந்தது. குடியானவன் காதுக்கும் அது எட்டிற்று. ஆனால், அவன் கவலையில்லாமலிருந்தான்.

காட்டில் மீன் அகப்பட்டது. அப்ப மழை பெய்தது. ஆற்றில் தூண்டிலில் முயல் சிக்கியது ஆகியவற்றைப் பற்றி அவன் மனைவியிடம் அடிக்கடிப் பேசி மகிழ்ந்தான்.புதையலின் செய்தி பண்ணையாருக்கு எட்டிற்று.

அவர் குடியானவனை அழைத்துக் கேட்டார்.