(228) ||
அப்பாத்துரையம் - 36
'ஆண்டே, புதையல் எடுத்திருந்தால் நான் உங்களிடம் தானே கொண்டுவருவேன். அப்படி உங்களுக்கு ஒளித்து எடுத்தாலும், எடுத்தவன் இன்னும் குடியானவனாகவா காலம் கழிப்பேன்,” என்றான் அவன்.
“உன் மனைவியைக் கேட்டாலல்லவா தெரியும்!” என்றார்
பண்ணையார்.
95
"நீங்கள் வேண்டுமானால் கேளுங்கள். அவள் பைத்திய மாயிற்றே! உங்களிடம்கூட அவள் ஏதேனும் உளறுவாள், என்றான் குடியானவன். குடியானவன். மனைவி அழைக்கப்பட்டாள். புதையலைப்பற்றிய செய்தி முழுவதும் அவள் விவரமாகக் கூறினாள்:
பண்ணையார்: புதையல் என்று அகப்பட்டது?
அவள் சற்று ஆர்ந்தமர்ந்து சிந்தித்தாள்.
குடியானவன் மனைவி: நாங்கள் காட்டுக்குப்போய் மீன் பிடித்தோம்; அதற்கு முந்தினநாள்.
பண்ணையார்: திகைத்தார்; "என்ன என்ன? காட்டுக்குப் போய் மீன் பிடித்தீர்களா?” என்று கேட்டார்.
"ஆம். அதுமட்டுமல்ல, இரவு முழுதும் அப்பமழை பெய்திருந்தது. மரங்களில் சிக்கிக்கொண்டிருந்த அப்பங்களை எடுத்து வந்தோம்" என்று கூறினாள். அருகே நின்றவர்கள் மெல்லச் சிரித்தார்கள். அவளுக்குச் சிறிது சீற்றம் உண்டாயிற்று.
66
'அன்று இரவு தூண்டிலிட்டு என் கணவர் ஆற்றில் ஒரு முயல் பிடித்தார். அந்த முயலையும் மீனையும் அப்பத்தையும் வைத்து நாங்கள் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டோம்,” என்று மேலும் அவள் கூறினாள்.
பண்ணையாருக்கு அவளைக் கூப்பிட்டுக் கேட்டதே வெட்கமாயிற்று. ஆயினும் கடைசியாக ஒரு கேள்வி மட்டும் கேட்டார்.
பண்ணையார்: இப்போது அந்தப் புதையல் எங்கே
இருக்கிறது?