(232
66
அப்பாத்துரையம் - 36
ஆ, வாருங்கள்! வாருங்கள், வந்து பாருங்கள்! பழைய குடிலைவிட இது எவ்வளவு சிறந்தது! இதில் ஒரு அறைவீடு, படுக்கயறை, கூடம், அடிசிற்களம் ஆகியவை தனித்தனியாய் இருக்கின்றன. பின்கட்டில் ஒரு சிறு தோட்டம். அதில் என்னென்ன பூஞ்செடிகள், காய்கறி பழச்செடி கொடிகள், மரங்கள்! நம் பழைய குடியளவு பெரிதான கோழிக்கூட்டில் அழகழகான சேவல்கள், பெடைக் கோழிகள், கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன பாருங்கள்! என்றாள் அவன் மனைவி,”
"சரி, இனி நாம் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ்வோம்!” என்றான் செம்படவன்.
அவள்.
"கூடியமட்டும் அவ்வாறு இருக்க முயலுவோம்," என்றாள்
ஓரிருவாரம், புதிய வீட்டில் செம்படவன் மனைவியின் உள்ளம் அமைந்திருந்தது. அதன்பின் அவள் பாராட்டுரைகளில் சிறுசிறு பாராட்டுரைகள் கலந்திருந்தன. இந்த வீடு மிகச் சிறிதுதான். தோட்டமும் இன்னும் பெரிதாயிருக்கலாம் என்று தொடங்கினாள். செம்படவன் கூறிய ஒவ்வோர் அமைதியுரையும் அவள் சிறு குறைகளை விரிவுபடுத்தி வளர்த்தன. இறுதியில் அவள் ஒரு பெரிய மாளிகையே வேண்டுமென்று விளம்பினாள். மீண்டும் மீனிளவரசனிடம் சென்று மனுப்போடும்படி வற்புறுத்தினாள்.
செம்படவன் விரும்பா விட்டாலும் வேறுவகையின்றிப் புறப்பட்டான். கடல் இப்போது நீல நிறமாக இருந்தது. கடற்கரையில் நின்றுகொண்டு,
66
“கடல் இளவரசே, கவனித் தருள்வாய்! அடம் பிடிக்கின்றாள்
ஆலிசு என் மனையாள்-இன்னும் திடங்கொண் டொருவரம் தேடுவாய் என்றே!”
என்று கூவினான்.