பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

233

“அன்பனே! அவள் இன்னும் என்ன வேண்டு மென்கிறாள்?” என்று மீன் கேட்டது.

அவன்.

“அவள் ஒரு மாளிகையே வேண்டும் என்கிறாள்” என்றான்

"அப்படியே ஒரு மாளிகையே அவளுக்குக் கிட்டியுள்ளது. அவளிடம் போ," என்று சொல்லிவிட்டு மீன் மறைந்தது.

மனைவி முன்போலப் புதிதாக அமைந்த மாளிகை வாயிலில் ஆடையணிமணிகளுடன் நின்றிருந்தாள். விலை யுயர்ந்த தட்டுமுட்டுப் பொருள்கள் வாய்ந்த அறைகளை எல்லாம் அவள் கணவனை இட்டுக்கொண்டுபோய்க் காட்டினாள். வகைவகையான வேலையாட்கள்,பணியாட்கள், ஏவலாட்களை யெல்லாம் கணவன் காண அழைத்துப் பல பணிகளிலும் ஏவினாள்.

"இந்த அழகிய மாளிகையில் நம் இன்பம் நிறைவு அடைந்துவிட்டது” என்றான் செம்படவன்.

இத்தடவை செம்படவப் பெண்டின் சம்படவப் பெண்டின் உள்ளம் ஒரு வாரமாவதற்குள் புது வாழ்வில் சலிப்புற்றது. ஒருநாள் விடியற்காலையில் அவள் கணவனை நெக்கி எழுப்பினாள். “அன்பரே, இந்த வேலையாட்களைக் கட்டியாள்வதில் என்ன பயன்? நாம் நாட்டுமக்களையல்லவா கட்டியாள வேண்டும். போங்கள், மீனிடம் சொல்லி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்,” என்றாள்.

“மீன் நம்மை எப்படி ஆட்சியாளராக்க முடியும்? நாம்தான் எப்படி ஆளமுடியும்?" என்று கணவன் அங்கலாய்த்தான்.

"தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு எல்லாம் முடியும். போய்க் கேளுங்கள். உங்களால் ஆள முடியாவிட்டால் நான் ஆளுவேன்,” என்றாள் மனைவி.

அவன் மீண்டும் சென்றான். கடலகம் இப்போது ஒளிகுன்றி அரையிருளார்ந்த சாம்பல் நிறமாகத் தோற்றிற்று கரையோரத்தில் நின்று அவன் மீண்டும்,