(234
||
66
கடல் இளவரசே,
கவனித் தருள்வாய்! அடம் பிடிக்கின்றாள்
ஆலிசு என் மனையாள்-மீண்டும் திடங்கொண் டோருவரம் தேடுவாய் என்றே!
என்று கனிவுடன் பாடினான்.
அப்பாத்துரையம் - 36
"மீண்டும் என்ன கோருகிறாள், உன் மனைவி?" என்று கேட்டது மீன்.
“அவள் அரசாள விரும்புகிறாள்,” என்றான் செம்படவன். “அவள் அரசாள்கிறாள், போய்ப்பார்,” என்றது மீன்.
இத்தடவை வரவேற்கவில்லை.
மனைவி அவனை வாயிலில் நின்று அவள் ஒரு தங்க அரியணைமீது வீற்றிருந்தாள். ஆனால், அவள் அனுப்பிய படைத்தலைவன் படையுடனும் படைமுரசு முழக்குடனும் வந்து செம்படவனை வரவேற்றான். அரச ஆடை அணிந்த தன் மனைவியைக் கண்டு அவளுடன் அரியணையில் அமர்ந்தான்.
செம்படவப் பெண்டு அமைச்சர் படை முதலியவைகளுக் கல்லாம் தக்க ஆணைகள் கட்ட கட்டளைகள் பிறப்பித்து ஆண்டாள்.
“நம் ஆவலின் உச்சியை நாம் எட்டிவிட்டோம். இனி நாம் அமைதியாய் வாழ்நாள் கழிக்கவேண்டியதுதான்," என்றான் அரசனாகிவிட்ட செம்படவன்.
“உச்சிக்கு நாம் நெடுந்தொலைவில் இல்லை,” என்றாள் அரசியாகி விட்ட செம்படவப் பெண்டு.
அவள், 'ஆவலின் உச்சியை எப்போதுதான் காணப் போகிறாளோ,' என்று மலைத்தான் செம்படவ மன்னன்.
66
“அரசனுக்குக் குடிகள் இறை கொடுக்கின்றனர். ஆனால், அரசர்களுக்கு அரசன் உண்டு என்று தெரிகிறது; அவனுக்கு அரசர்கள் திறை செலுத்துகிறார்களாம். நாம் அரசர்க்கரசரானால்