பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5

235

தான் நம் ஆட்சி ஒளிவீசும். விடியற்காலமே சென்று அதற்கான முயற்சி செய்யுங்கள்,” என்றாள் அரசி.

அவன் சென்றான். அவன் உள்ளம் கேட்டுக் கேட்டுப் புண்பட்டிருந்தது. கடலகம் கருங்கும்மென்றிருந்தது. அதன் கருவில் ஒரு புயல் இரைந்தது. அவன் கரையோரம் நின்றகொண்டே.

'கடல் இளவரசே,

கவனித் தருள்வாய்! அடம் பிடிக்கின்றாள்

ஆலிசு என்மனையாள்-பின்னும் திடங்கொண்டொருவரம் தேடுவாய் என்றே!”

என்று பாடினான்.

66

"இப்போது என்ன வேண்டுமாம்?" என்றது மீன். அரசர்ககரசராக விளங்க வேண்டும் என்று அவள் அவாவுகிறாள்,” என்றான் அவன். “ஆய்விட்டாள், போய் கண்டு மகிழ்,” என்று கூறி அகன்றது மீன்.

சம்படவ மன்னன் இத்தடவை முன்னிலும் பெரிய விருதுகளுடன் வரவேற்கப்பட்டான். இரு வரிசை அரியிருக்கை களிடையே அமைந்த ஓர் உயர் அரியிருக்கை மீது செம்படவப் பெண்டு பேரரசியாய் வீற்றிருந்தாள். மடத் தலைவர்களும் குருமார்களும் வீறார உட்கார்ந்திருந்தனர். செம்படவ மன்னனும் இப்போது மன்னர் மன்னன் என்ற முறையில் அவன் மனைவி வீற்றிருந்த அரியிருக்கை அருகேயுள்ள இணை அரியிருக்கையில் அமர்ந்தான்.

செம்படவப் பெண்டு ஆலிஸ், இப்போது ஒரு கணம் கூட அமைதியாயிருக்க முடியவில்லை. “மன்னர் மன்னன் நிலைதான் உச்ச நிலையா, அதற்குமேல் உயர்ந்த நிலை வேறு ஏதாவது இருக்கிறதா," என்ற ஆராய்ச்சியில் அவள் வெறித்திருந்தாள்.

செம்படவன்: இதற்குமேல் இனி உன்னால் எண்ணிப் பார்க்கக்கூட உயர்நிலை இல்லை.