பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் 36

(238) || காற்றும்,கதிரவனும், நிலவும், விண்மீனினங்களும் நம்மை இன்னும் மதிப்பதில்லை. ஆகவே, நாம் இயற்கைகைய இயக்கும் இறைவன் ஆகவேண்டும். போங்கள், நாளை சென்று ஏற்பாடு செய்யுங்கள்,' என்றாள்.

செம்படவனுக்கு முதன் முதலாகக் கால் கடுத்தது; மனம் சோர்ந்தது; உடல் வேர்த்தது. ஆயினும் வேறு வழியின்றிப் புறப்பட்டான்.

இத்தடவை கடலும் வானமும் ஒருங்கே காரிருள் சூழ்ந்திருந்தது. கடலலைகள் பனிமலைகள் போலச் சறுக்கி வந்தன. அவன் கரையில் நின்ற வண்ணமே,

“கடல் இளவரசே நீ

கவனிப்பாயா?

அடம் பிடித்த என் மனைவி

ஆலிசு இன்னும்

திடங் கொண்டே மெத்தவரம்

தேடுகின்றாள்!"

என்று கூவினான்.

66

“இன்னும்தான் என்ன கேட்கிறாள்?" என்று கேட்டது மீன். “இயற்கையை இயக்கும் இறைவன் ஆக விரும்புகிறாள்." என்றான் செம்படவன்.

66

"அப்படியா?

அவரவர் இயற்கை வாழ்வுதான் அவரவர்களுக்குச் சரி. பழைய கோழிக் கூட்டிலேயே அவள் இருக்கட்டும். ஏனென்றால், எம் மாயம் அவள் பேராவல் கண்டு நீங்கி விட்டது. பேராவலின் உச்சி கண்டபின் நான் மறுபடி இளவரசனாகி விட்டேன்” என்றது.

மீண்டும் மீன் இளவரசனாகி மறைந்தது. செம்படவப் பெண்டு செம்படவப் பெண்டேயானாள். அவள் பேராவல் ஒழிந்தது.