29. சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை
நார்வே நாட்டுக்கதை
நாட்டுப்புறப் பண்ணை ஒன்றில் ஒரு குடியானவன் தன் மனைவியுடன் காலங்கழித்தான். குடியானவன் முன் கோபி; ஆத்திரக்காரன்;ஆணவம் உடையவன்.பண்ணையில் அவனுடன் வேலை செய்தவர்களும் அவனுக்குக் கீழ் வேலை செய்தவர்களும் அவனைக்கண்டு நடுங்கினார்கள்.
ஆனால், அவன் மனைவி தன் வாய்த்திறத்தாலும், இன்முகத்தாலும் அவன் கோபத்தைத் தணித்து, அவனை இயக்கி வந்தாள். ஒரு பெண் இப்படித் தன்னை ஏய்த்து வருவது கண்டு. அவன் அவளுக்குச் சரியான பாடம் படிப்பிக்க வேண்டுமென்று விரும்பினான்.
முதுவேனில் காலத்தில் களத்தில் போரடித்து
அலுப்போடு அவன் வீட்டுக்கு வந்தான். வீட்டில் அன்று சமையல்வேலை அப்போதுதான் தொடங்கியிருந்தது. இதுகண்டு, "பகலெல்லாம் நான் வேலைசெய்து வருகிறேன். நீ வீட்டிலிருந்துகொண்டு சோம்பேறியாய் இருக்கிறாய். இதெல்லாம் இனி நடவாது. நாளை முதல்...” என்று அவன் வானமளாவச் சீறினான்.
அவள் அவனை முடிக்கவிடவில்லை. "நாளைமுதல் என்ன? ஒரு நாளாவது நான் களத்தில் உங்கள் வேலையைப் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் இங்கே இருந்து கொஞ்சம் சோம்பேறியாக வேலை பாருங்கள்," என்றாள்.
அவன், "ஓகோ, நீ பகல் முழுதும் செய்வதை ஒரு மணி நேரத்தில் செய்துவிட்டு, நான் சோம்பேறியாகவே இருக்கப்