(240
அப்பாத்துரையம் 36
—
போகிறேன்.சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை காரியம் வேறு என்பதை நீ நாளை பார்க்கலாம்” என்றான்.
மறுநாள் பொழுது விடிவதற்குள் குடியானவன் மனைவி அரிவாள் எடுத்துக் கொண்டு மற்ற வேலையாட்களுடன் களத்துக்குச் சென்றாள். வீட்டாண்மையைக் கணவனிடமே ஒப்படைத்துவிட்டாள்.
அவன் முதலில் வேம்பாவில் வெந்நீருக்காக நீருற்றித் தீ முட்டினான். உச்சி நேரம் மனைவிக்கு உணவு கொண்டு போக வேண்டுமென்று நினைத்துப் பானையில் உலை வைத்து அரிசி களைந்து இட்டான். அதன்பின் காலை யுணவுக்கான பாலேட்டை எண்ணிப் பாலைக் காயவைத்து இறக்கி, ஏடு எடுக்கும் பொறியில் ஏடெடுக்க உட்கார்ந்தான்.
பாதி ஏ ஏடெடுப்பதற்குள் வேம்பாவிலிருந்து ஆவி கிளம்பிற்று. வெந்நீரைத் தான் குளிப்பதற்கான கலத்தில் பெய்து கொள்ள எண்ணி அவன் எழுந்து சென்றான். வேம்பாவின் திருக்கைத் திறக்கும்போது அது கையுடன் வந்துவிட்டது. அதைத் திரும்பவும் மாட்டமுனைந்தான். ஆனால், அதற்குள் சோறு பொங்கி வழிவது கண்டு உலையின் பக்கம் சென்றான். உலையைக் கிளறி விட்டான். இது முடிந்து திரும்பிப் பார்க்கும்போது, பக்கத்தில் தோட்டத்திலிருந்த பன்றி வந்து பாலைக் கொட்டிப் பாலேட்டைத் தின்பதைக் கண்டான்.
உலையை அப்படியே போட்டுவிட்டு அவன் விரைந்து சென்று பன்றியைக் காலால் உதைத்தான். உதை பொறுக்க முடியாமல், அது பக்கத்திலிருந்த தயிர்ப்பானையையும் உடைத்து அதைக்கொட்டிவிட்டு, வீல் வீல் என்று கத்திக்கொண்டு ஓடிற்று.
குடியானவனுக்குப் பன்றிமீது எழுந்த கோபத்தில் அவன் அதைத் துரத்திக்கொண்டே தோட்டம்வரை ஓடினான். ஓடும்போது தோட்டத்தில் புதிதாகப் பாவியிருந்த காய்கறிப் பாத்திகள் பல சிதைந்தன. அவன் அத்துடன் பன்றியை விட்டுவிட்டுத் திரும்பினான்.
வேம்பாவின் திருகு இன்னும் தன் கையிலிருப்பதை அவன் அப்போது தான் உணர்ந்தான். உடனே வேம்பாவின் பக்கம்