சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
241
ஓடினான். கீழேயிருந்த வெந்நீர்க் கலம் நிறைந்து வெந்நீர் வீணானதுடன் உலையடுப்பின் தீயும் அதனால் அவிந்துவிட்டது.
உலையை மீண்டும் ஊதித் தீப்பற்றவைக்க அவன் அரும்பாடுபட்டான். காலையுணவுக்கு வேண்டிய பாலேடும் தயிரும் கெட்டதனால் அவன் வெறுமையாக அப்பத்தை உண்ண வேண்டியதாயிற்று.
உச்சி
நேரமாகியும்
அருகில் புறத்திண்ணைமீது கட்டப்பட்டிருந்த பசுவை யாரும் அவிழ்த்துவிடவில்லை. தண்ணீரோ புல்லோ வைக்கவும் இல்லை. அது கட்டறுத்துக் கொண்டு வெளியே வந்தது. குடியானவன் அதைப் பின் பற்றிச் சென்று பிடித்தான். அதற்கு வைக்கோல் வைத்து விட்டுத் தண்ணீர் மொள்ளச் சென்றான்.
அடுப்பில் கறிக்கு வேண்டிய காய்களை இன்னும் நறுக்கவில்லை யாதலால், அதை மறக்காதிருக்கக் காய்கறிகளைத் தோள்குட்டையில் கட்டி வைத்துக் கொண்டு கேணியில் நீர் இறைக்கச் சென்றான். கேணியில் நீரிறைக்கக் குனிந்தவுடன் காய்கறிகளின் மூட்டை கிணற்றினுள்ளே விழுந்துவிட்டது. எடுத்ததெல்லாம் தோல்வியானது கண்டு அவன் எரிச்சலுடன் தண்ணீர் இறைத்துப் பசுவுக்கு வைத்தான்.
கயிறு
பசுவைக் கட்டும் அறுந்துபோனதுடன் கட்டுத்தறியும் முறிந்துப்போயிருந்தது. ஆகவே, அதைப் போரடிக்கும் நீண்ட தாம்புக் கயிற்றில் கட்டி மறு முனையை வீட்டின் மேல் மாடியின் பலகணி வழியாக எறிந்தான். பின் வீட்டினுள் சென்று அதைத் தன்னுடலிலேயே கட்டிக் கொண்டு கயிற்றுடன் மற்ற வேலைகளைக் கவனிக்கக் கீழே இறங்கினான்.
அவன் இதுவரை தொட்டிலில் கிடந்த குழந்தையைக் கவனிக்கவில்லை. அது அழுது பார்த்தது. அப்போது அவன் மாட்டுக்குத் தண்ணீர் இறைப்பதில் ஈடுபட்டிருந்ததால், அழுகை கேட்கவில்லை.
குழந்தை தானாக இறங்கி வந்தது. பாலையும் பாலேட்டையும் தேடிப் பார்த்தது; காணவில்லை; அடுப்பில் சோறு கொதித்துக் கஞ்சியாக வழிந்து கொண்டிருந்தது.