(242
அப்பாத்துரையம் - 36
பசியின் கொடுமையால் அதைக் கையாலெடுக்க அது முயன்றது. கஞ்சி சுட்டுவிடவே அது தடுமாறி விழுந்தது. அதனுடன் கொதிக்கும் சோற்றுப் பானையும் விழ, கஞ்சிநீர் அதன் மீது பட்டு உடலெல்லாம் வெதும்பிற்று. நோவு பொறுக்காமல் அது கூவிய குரல் கேட்டு குடியானவன் ஓடோடி வந்தான்.
குழந்தையின் புண்ணாற்ற அவனுக்கு எதுவும் வழி தோன்றவில்லை. அதற்கிடையில் பசு எதையோ கண்டு கலைந்து தாம்புக் கயிற்றை இழுத்துக் கொண்டு திண்ணையிலிருந்து குதித்தது. அதன் பளுவால் தாம்புக் கயிற்றுடன் குடியானவன் உயரத்தூக்கிச் செல்லப்பட்டு, மாடித்தளத்தில் தொங்கினான். மறுபுறம் பசுவும் கீழே நிலத்தில் விழாமல் தொங்கிற்று. தன் நோவு ஒருபுறம்; தந்தையின் முன்பின் பாராநிலை ஒரு புறம்; குழந்தைக்குக் கிலியாயிற்று.அது 'அம்மா, அம்மா' என்று கூவிற்று.
களத்தில் ஆடவருடன் ஆடவனாகக் குடியானவன் மனைவி எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுக் கணவனுக்காகக் காத்திருந்து பார்த்தாள். கணவனையும் காணவில்லை. உணவையும் காணவில்லை. என்னவோ ஏதோ என்ற கவலையுடன் ஓ டோடி வந்தாள். தொலைவிலிருந்தே குழந்தையின் கதறல் தாயுள்ளத்தைக் குலுக்கிற்று. பசு தொங்குவது கண்டு அவள் பின்னும் பதைபதைத்தாள். உள்ளே கணவனும் குழந்தையும் இருந்த நிலை கண்டு திகிலடைந்தாள்.
அவள் குழந்தையை ருடா கண்ணே' என்று கூறிக்கொண்டே அரிவாள் மணையுடன் சென்று கயிற்றை அறுத்துக் கணவனை விடுவித்தாள். ஆனால், மறுபுறக் கயிறை விடாமல் பலகணியில் கட்டிவிட்டு ஓடோடி மறுபுறம் கயிற்றை அறுத்துப் பசுவை விடுவித்தாள். மற்ற வேலைகளைச் சீர்திருத்த அவளுக்கு அரைநாழிகை போதுமானதாயிருந்தது.
ஒரு நாழிகை கழித்து வழக்கம் போலக் குழந்தையும் தாயும் உண்டார்கள். குழந்தையின் நொந்த புண்ணுக்குத் தாய் எண்ணெய் தடவி நோவாமல் பச்சிலையும் பஞ்சும் வைத்துக் கட்டித் தொட்டிலிலிட்டாள்.சிறிது நேரத்துககுள் மருத்துவரை அழைத்துவந்து பண்டுவங்கள் முறைப்படி செய்தாள்.