பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

(245

அரசன்: அப்படியா? இந்தச் சிறு வருவாய் உங்கள் செலவுகள் எல்லாவற்றுக்கும் முழுதும் போதுமானதாய் இருக்கிறதா?

விறகுவெட்டி: ஆம்; செலவுக்கு மட்டுமல்ல. நான் அதில் சிறிது மீத்தும் வைக்க முடிகிறது.

அரசன்: மீத்து வைக்கிற தொகையை நீ என்ன செய்வாய்?

விறகுவெட்டி: அதை நான்கு கூறாகப் பிரிக்கிறேன். முதற் கூற்றை நான் மண்ணில் புதைக்கிறேன். இரண்டாம் கூற்றைக் கொண்டு என் பழங்கடன் அடைக்கிறேன். மூன்றாவது கூற்றை நான் ஆற்றில் எறிகிறேன். நான்காவது கூறு என் எதிரிக்குச் செல்கிறது. அரசனுக்கு விறகுவெட்டி கூறியது ஒன்றும் புரியவில்லை.

அரசன்: இது என்ன? புதிர் போடுகிறாய் போலிருக்கிறதே! மீத்து வைக்கும் உனக்குக் கடன் ஏது? பணத்தை யாராவது புதைத்து வைக்கவோ ஆற்றில் போடவோ எதிரிக்குக் கொடுக்கவோ செய்வார்களா?

விறகுவெட்டி: ஆம். நான் புதிர்தான் போடுகிறேன் உங்களிடம் தனியாகப் புதிரை விளக்கிக்கூறத் தடையில்லை

அரசன் தன் ஊழியர்களையும் விறகுவெட்டியின் மனைவியையும் விட்டு, விறகுவெட்டியைச் சற்று அப்பால் கூட்டிக்கொண்டு சென்றான். விறகுவெட்டி தன் புதிருக்குத் தானே விளக்கம் தந்தான்.

விறகுவெட்டி: என் மீப்புப் பொருளில் முதற்கூற்றை நான் மண்ணில் புதைக்கிறேன் என்று சொன்னேன். அது - நான் ஏழை எளியவர்களுக்காக உதவும் சிறு பொருள். மண்ணுக்குள் புதைத்துவைத்த நெல் முதலிய கூலமணிகள் வீணாய்ப் போவது போலத் தோற்றுகின்றன. ஆனால், நிலம் நமக்கு அவற்றைப் பன்மடங்காக வளர்த்துத் தருகிறது. ஏழை எளியவர்க்குச் செய்த உதவியும் உடனடியாகப் பயன்தாராவிட்டாலும், நம் இனத்தை வளர்த்து நமக்குப் பன்மடங்காகப் பயனைத் தருகிறது.

ரண்டாவது கூற்றை, நான் பழங்கடனடைக்கப் பயன்படுத்துகிறேன். நாம் எவ்வளவு கொடுத்தாலும் என்ன